தியானம் (புரட்டாசி 16, 2023)
எங்கே நிலைத்திருப்பது?
யோவான் 15:5
அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;
பல ஆண்டுகளுக்கு பின், தன் சபையிலிருந்த விசுவாசயானவனொருவனை சந்தித்த மேய்ப்பரானவர், அவனை நோக்கி: எப்படி சுகமாய் இருக்கின்றாயா? இப்போதும், நீ சென்ற இடத்திலே தேவனை ஆரா தித்து வருகின்றாயா என்று அவனை விசாரித்தார். அதற்கு விசு வாசியானவன்: இருக்கும் இடமல்ல, கர்த்தரில்; நிலைத்திருப்பது தான் முக்கியமானது எனக் கூறினான். அதற்கு மேய்பரானவர்: மகனே, நான் உன்னை குற்றப்படுத்தும்படி அந்தக் கேள்வியை கேட்கவில்லை. நீ சொல்வது உண்மை, ஆம் கர்த்தராகிய இயேசுவிலே நிலைத்திருப்பதே ஒரு விசுவாசியானவனுக்கு தேவையானதும், அவசியமானதுமாக இருக்கின்றது. கர்த்தரில் நிலைத்திருக்கின்றவன், அவருடைய வார்த்தையில் நிலைத்திருக்கின்றான். அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்பவனின் வாழ்க்கையிலே திவ்விய கனிகள் வெளிப்படும். ஆனால், முன்பு போலவே, உன்னுடைய வாழ்க்கையிலே எதிரிடையான காரியங்கள் சூழ்ந்து கொள்ளும்போது, நீ நிலைதவறி, காடுவிட்டு காடு மாறும் புலியைப் போல மாறிவிடுகின்றாய். நாம் எங்கி ருந்தாலும், உயிருள்ளவரை, இந்தப் பூமியிலே தான் வாழ வேண்டும். இது கோணலும் மாறுபாடான உலகம். நீ இந்த உலகிலே எங்கு சென் றாலும், எதிராளியானவனுடைய கண்களுக்கு மறைவாக இருக்கப் போ வதில்லை. விதிவிலக்கில்லாமல், எல்லோருக்கும் போராட்டம் உண்டு. அது போலவே, பட்சபாதமில்லாமல், தேவன் தம்முடைய ஆவியான வரை நமக்கு கொடுத்திருக்கின்றார். நிலைத்திருந்து கனி கொடு. போ ராட்டங்களை வேதவார்த்தையினாலும், ஜெபத்தினாலும் ஜெயம் கொள்ள வேண்டும் எனவும் அவனுக்கு என்று அறிவுரை கூறினார். பிரியமானவ ர்களே, நிலைத்தருந்து கனி கொடுக்கும் வேதவார்த்தை உங்களில் நிறைவேற இடங்கொடுங்கள். ஒருவன் நிலைத்திருப்பவன் என்று எத னால் அறிந்து கொள்ள முடியும்? அவன் சாதகமற்ற சூழ்நிலையிலும், தன் வாழ்விலே, தேவன் எதிர்பார்க்கும் கனிகளை வாழ்விலே வெளிக் காட்டுவன், தேவனுடைய வார்த் தையில் நிலைத்திருக்கின்றவன் என்று தன் வாழ்க்கை வழியாக சாட்சி பகிர்கின்றான். மனிதனுடைய மனம் மாறாமல், அவன் இடம் மாறுவ தால் அவனுக்கு அதிலே என்ன பலன். இடமாற்றம் அவன் வாழ்விலே தேவன் விரும்பும் மனமாற்றத்தை கொண் டுவந்தால் அது அவனுக்கு நல்லது. விசுவாசியானவனின் நங்கூரம் ஆண் டவர் இயேசுவில் இருப்பதால், அவன் ஆபத்தை கண்டு ஓடிப் போவதில்லை. மாறாக அவன் இயேசுவில் நிலைத்திருந்து கனி கொடுப்பான்.
ஜெபம்:
மிகுந்த கனிகளை கொடுக்கும்படி என்னை அழைத்த தேவனே, வாழ்வின் சூழ்நிலைகள் எப்படியாக இருந்தாலும், எப்போதும் கிறிஸதுவுக்குள் நிலைத்திருந்து கனி கொடுக்க என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 5:22-26