புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 15, 2023)

சூழ்நிலைகள் மாறும் போது...

சங்கீதம் 92:12

நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.


ஒரு தகப்பனானவன், தன் வீட்டுத் தோட்டத்தின் வளமிக்க நிலத்திலே, சில மிளகாய் நாற்றுகளை நட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய சின்ன மகனானவன், தான் பராமரிக்கும்படி, தனக்கும் ஒரு கன்றை தரும்படி தன் தகப்பனாவனிடம் கேட்டுக் கொண்டான். தகப்பனானவனனும், நட ப்பட்ட நாற்றுகளில் ஒன்றை அவனுக்கு காண்பித்து, நீ இந்த கன்றை பராமரித்துக் கொள் என்று கூறினான். சில நாட்கள் சென்ற பின்பு, மழை பெய்ய ஆரம்பித்தது. தோட்டத்தை பார்க்கச் சென்ற தகப்பனானவன், மகனானவனுடைய மிளகாய் கன்றை நட்ட இடத்தில் காணவில்லையே என்று தேடினான். அதற்கு அந்த மக னானவன், தகப்பனானவரை நோக்கி: அப்பா, மழையில் என் மிளகாய் கன்று அழிந்து விடுமோ என்று, அதை பிடுங்கி, ஒரு சாடியிலே வைத் திருக்கின்றேன் என்றான். அதைக் கேட்ட தகப்பனானவர், சிரித்துவிட்டு, அவன் பாட்டிற்கு அவனை விட்டுவிட்டார். சில நாட்களுக்கு பின், கடும் வெப்பமாக இருந்ததால், அந்த மகனானவன், சாடியிலிருந்து, மிளகாய் கன்றை பிடுங்கி, பெரிய மரத்தின் நிழலிலே நட்டான். பின்னர், காற்று வீசியபோது, அதை பிடுங்கி வேறு இடத்திலே நட்டான். பூத்து காய்க்க வேண்டிய நாட்களிலே அந்த மரமானது பட்டுப்போய் விட்டது. இந்த சம்பவத்தை வாசிக்கும் போது, ஒருவேளை நகைப்புக்குரியதாக இருக் கலாம். ஆனால், சற்று சிந்தியுங்கள். இன்று தேவ பிள்ளைகள் 'புயலா னாலும், மழையானாலும், வெயிலானாலும், குளிரானலும் நான் ஆண்ட வர் இயேசுவுக்கு தொண்டு செய்வேன்' என்று பல வாத்தியக்கருவி களை நேர்த்தியாக இசைத்து, இனிமையாக பாடுகின்றார்கள். ஆனால், வாழ்க்கையிலே சின்ன பிரச்சனை ஏற்படும் போது, வேத வார்த்தைகள் தங்கள் வாழ்வில் நிறைவேற இடங் கொடுக்க மனதில்லாததால், சீக்கிர மாக, வீட்டை, பாடசாலையை, வேலையை, சபையை விட்டு வேறு இடத்திற்குச் சென்று விடுகின்றார்கள். செல்லுமிடத்தில் நிலைத்திருந்து கனி கொடுக்காமல், அந்த சின்ன மகனானவனைப் போல குழந்தை தனமாக நடந்து கொள்கின்றாரகள்;. கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப் பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியி ல்லையென்றும், விளங்கப்பண்ணும்படி, அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ;டியும் பசுமையுமாயிருப்பார்கள். எனவே கர்த்தருடைய வார்த் தையில் நிலைத்திருந்து கனிகொடுங்கள்.

ஜெபம்:

வாசற்படியிலே நின்று இதயக் கதவை தட்டுகின்ற தேவனே, உம்முடைய சத்தத்திற்கு என் இருதயத்தை திறந்து, உம் வார்த்தையி ன்படி ஜெயங்கொள்ளுகின்ற வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 1:1-6