புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 14, 2023)

அதிகாரங்களின் குறைகள்

1 பேதுரு 5:6

அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.


அதிகாரங்கள் மத்தியிலே இடம்பெறும் நடவடிக்கைகளைக் குறித்து நான் மிகவும் கரிசனையாக உள்ளேன். இன்னென்ன காரியங்களிலே தவறான முடிவுகளை எடுத்திருக்கின்றார்கள். என்னுடைய விஷயத்திலும் நீதி நட த்தப்படவில்லை என்று ஒரு வாலிபனானவன் தன் மனதின் ஆதங்க த்தை தன் பாட்டனாரிடம் கூறினான். அதற்கு அந்த பாட்டனானவர் அவனை நோக்கி: தம்பி, நான் சொல்வதை சற்று பொறுமையுடன் கேட் டுக் கொள். அதிகாரங்களிலே இருப்ப வர்கள் தாங்கள் அறிந்த விடயங்களை யாவையும் எல்லோருக்கும் சொல்ல முடியாது. ஒருநாள், நீயும் அதிகாரிக ளுடைய ஆசனத்திலே உட்காரும் போது அதை நீ அறிந்து கொள்வாய். அப்படி நீ சொல்வதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், பொறுமையாய் இரு. தாவீதையும், சவுல் ராஜாவையும் பற்றி நீ உன் சிறு பிரயாத்திலிருந்தே அறிந்திருக் கின்றாய். இறைபற்றும் தேசப்பற்றும் உள்ளவனாகிய இளைஞனாகிய தாவீதினிடத்தில் எந்த குற்றமும் இல்லாதிருந்தும், ராஜாவாகிய சவுல், தாவீதை கொன்றுபோடும்படி சதிகளைச் செய்தான். அந்த வேளையி லும், தாவீதோ, காரியங்களை தன் கரத்தில் எடுத்துக் கொள்ளாமல், தேவனுடைய நேரம் வரும்வரை நீடிய பொறுமையோடு, துன்பங்களை சகித்து வந்தான். எனவே, நீ கற்றுக் கொண்ட வேதவார்த்தைகள் வாலி பர்களாயிருந்த யோசேப்புக்கும், தாவீதுக்கும், தானியேலுக்கும் மட்டும ல்ல, தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் இக்காலத்திலே உன்னில் நிறைவேற நீ இடங்கொடு என்று நல்லாலோசனை கூறினார். அந்தப் படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒரு வருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ள வர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கி யிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலை களையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் என்று பரிசுத்த வேதாகம த்திலே நாம் வாசிக்கின்றோம். ஆம் பிரியமானவர்களே, வாலிபர் கள் மட்டுமல்ல, இக்காலத்திலே எல்லா வயதுடையவர்களும் வீட்டில், வேலை யில், சபையில் பல காரியங்களைக் குறித்து நொந்து கொள் கின்றார் கள். தாங்கள் முற்றிலும் தேறினவர்கள் என்ற எண்ணமுடையவ ர்களாகி விடுகின்றார்கள். வேதவார்த்தைகள் உங்களில் நிறைவேறவும், நற்கனிக ளால்; உங்கள் வாழ்க்கையானது அலங்கரிகப்படவும் இடங் கொடுங்கள்.

ஜெபம்:

காலங்களையும் சமயங்களையும் மாற்றி, ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிற தேவனாகிய கர்த்தாவே, நீர் குறித்த நேரம் வரை நான் பொறுமையோடு காத்திருக்க எனக்கு கற்றுத் தருவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 3:11