புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 13, 2023)

வேதம் நிறைவேற இடங்கொடுங்கள்

மத்தேயு 5:44

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.


மாலை வேளையிலே, ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியான வள் காலில் கல் தடக்கியதால் கீழே விழுந்துவிட்டாள். காலில் சிறு காயங்கள் ஏற்பட்டதால் அழுகையுடன் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பாட்டனாரிடம் சென்றாள். அவர் அவளை தேற்றி, தன்னிடமிருந்த சிறந்த கைமருந்தை அவள் காயங்களில் போட் டார். சில நாட்களுக்குள்ளே சீக்கிர மாக அவள் காயங்கள் ஆறிவிட்டன. பல மனிதர்கள் மத்தியிலே வாழும் மனிதனுடைய வாழ்கையிலே மன திலே ஏற்படும் காயங்களை யார் தவி ர்த்துக் கொள்ள முடியும்? பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகள் என்று அழைப்பப்படும் நாமும் அதற்கு விதிவலக்கானவர்கள் அல்லர். ஆனால், மனக் காயங் களை ஆற்றுவற் குரிய அருமருந்தை நம்முடைய பிதாவாகிய தேவன் நமக்கு கொடுத்திருக்கின்றார். அந்த அருமருந்தாகிய தேவ வார்த்தை களானது நம்மை ஆற்றவதற்கு நாம் இடங் கொடுக்க வேண்டும். மனக் காயங்கள் ஏற்பட முன்பதாக, நீடிய பொறுமை, மன்னிப்பு, தேவ நீதிபோன்ற மேன்மையான காரியங்களை குறித்து தேவபிள்ளைகள் தாராளமாக பேசிக் கொள்கின்றார்கள். ஆனால், காரணத்தோடேயோ அல்லது காரணமின்றியோ மனதிலே காயங்கள் ஏற்படும் போது, கற்றுக் கொண்ட யாவற்றையும் மறந்து, குணப்படுத்தும் அருமருந்தா கிய வேதத்தை தள்ளிவிட்டு, தீவிரமாக, பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று, சுயநீதியை நடப்பிக்கின்றார்கள். இதனால் அவர்கள் வேதத்தை அறிந்திருந்தும், அதன் மகத்துவத்தை அனுபவ சாட்சியாக தங்கள் வாழ்வில் ருசிபார்ப்பதில்லை. மனக்காயங்கள் மனவேதனைகளை உண் டாக்கும். அப்படியான சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக் கொள்ளும் போது, கர்த்தருடைய வேதம் உங்கள் வாழ்வில் நிறைவேற இடங் கொடுங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகி யுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகை க்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களு க்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண் ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங் கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே நீங்களும் உங்கள் பரம பிதாவைப் போல பூரண சற்குணராய் அனுதினமும் மாறுங்கள்.

ஜெபம்:

என் பிதாவாகிய தேவனேஇ மனக் காயங்கள் ஏற்படும் நேரங்களிலே வேதத்தின் மகத்துவங்கள் என் வாழ்விலே நிறைவேறும்படிக்கு, நான் இடங் கொடுக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:19-21