புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 12, 2023)

வாழ்க்கையின் அனுபவங்கள்

சங்கீதம் 119:174

உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.


வேதத்தை வாசித்து தியானிப்பது ஏன் சிலருக்கு சலிப்பாக (Monotonous) இருக்கின்றது? தினமும் தேவ சமுகத்தை நாடி ஜெபிப்பது ஏன் சிலருக்கு அலுப்பாக (Boring) இருக்கின்றது? சபை கூடி வருதலை குறித்த வாஞ்சை (Desire) சிலருக்கு அற்றுப் போய்விடுகின்றது. அவை களின் பலனையும் அவைகளினால் உண்டாகும் மனநிறைவையும் தங் கள் வாழ்விலே அனுபவிக்காதவர்களுக்கே, அவைகள் சலிப்பாகவும், அலுப்பாகவும் இருக்கின்றது. கர்த்த ருடைய வேதம் குறைவற்றதும், ஆத் துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கி றது (சங் 19:7). என்றும், ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது. ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன் (சங் 84:10) என்றும் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச் சியாயிருந்தேன் (சங் 122:1) என்றும் வேதத்தின் மகத்துவத்தையும், தேவ சமுகத்தில் காத்திருப்பதின் மேன்மையையும் அறிந்து, உணர்ந்து அனுபவித்த தேவபக்தன் இவைகளைக் கூறியிருக்கின்றார். பிரியமானவ ர்களே, 'கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிற துமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத் தைச் சந்தோஷpப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய கற்பனை தூய் மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பய ப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறது மாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியு மாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதே னிலும் மது ரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதி னால் மிகுந்த பலன் உண்டு.' என்பதை தியானித்து அவைகளை உங் கள் வாழ்க் கையில் அனுபவ சாட்சியாய் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சின்னக்காரியங்களினாலே வேத த்தை பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். சிறிதாய் விதைத்து பெரிதாய் அறுவடை செய்யுங்கள். கிறிஸ்துவோடு வாழும் வாழ்க்கையின் மேன் மைக்கு எதிராக செயற்படும் அந்தகார கிரியைகளைக் கண்டு கொள்ள பிரகாசமுள்ள மனக்கண்களை தரும்படி வேண்டிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நிறைவான வாழ்விற்கு என்னை அழைத்த தேவனேஇ, சத்திய வேதத்தின் மகத்துவங்களை நான் உணர்ந்து, மனமகிழ்ச்சியோடு நிறைவான வாழ்க்கை வாழ என்னை நீர் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 1:19