புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 11, 2023)

அனுதின பயற்சி

யோவான் 6:27

அழிந்துபோகிற போஜனத்தி ற்காக அல்லஇ நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரி யை நடப்பியுங்கள்


பாடசாலைக்கு படிக்கச் சென்ற மாணவனானவன், தன் பாடங்களை ஊக் கமாக கற்றுக் கொண்டு, அனுதினமும் கற்றவைகளை இறுதிப் பரீட்சை வரைக்கும் மீளாய்வு செய்து வந்தான். தேசிய ஓட்டப்பந்தையப் போட் டியில் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டவன், பந்தையப் போட் டியின் நாள்வரைக்கும் ஒழுங்காக பயிற்சிகளை செய்து வந்தான். இப் படியாகவே தங்கள் இலக்கை நன்றாக அறிந்தவர்கள், அந்த இலக்கை அடையும்வரை அயராது உழைத்து வந்தார்கள். மழையோ, குளிரோ, வெயிலோ, பனியோ அவர்களை தடு த்து நிறுத்துவதில்லை. அதிகாலை யிலும், நள்ளிரவிலும், காலையிலும், மாலையிலும் அவர்கள் தங்கள் பயி ற்சிகளை செய்ய ஆயத்தமுள்ளவர் களாகவே இருக்கின்றார்கள். கிழ மைக்கு ஐந்து நாட்கள் பாடசாலை யக்குச் சென்று வருகின்றார்கள். வேலை செய்கின்றார்கள் வாரந்தோ றும் ஐந்து நாட்களும் தவறாமல் வேலைக்கு செல்கின்றார்கள். ஏன், சிலர் ஆறு அல்லது ஏழு நாட்களும் கூட கடுமையாக உழைக்கின்றார்கள். ஆனால், பரம அழைப்பின் பந்தையப் பொருளுக்காக மனிதர்கள்; கிழ மைக்கு ஒருநாளை நியமிப்பதைக் குறித்து முடிவில்லாத கேள்விகளை கேட்டுக் விமர்சித்துக் கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, ஒருவன் இந்த உலத்திலே அதிகமாக பிரயாசப்பட்டு, அநேக சாதனைகளை நிலை நாட்டி, தனக்கும் தன் சந்ததிக்கு மென்று ஆஸ்திகளைச் சேர்த்து, தேசங் கள் மத்தியிலே பிரபல்யமுள்ளவனாக இருந்தும், உலகிலே சுகதே கியாக வாழ்ந்தும், அவன் தன் ஆத்துமாவிற்கு கேடு விளைவித்தால், அதனால் அவனிற்கு பலன் என்ன? வானமும், பூமியும் அதிலுள்ள யாவும் ஒழிந்து போகும். மனிதனுடைய யோசனைகளும் அவனோடு மண்ணு க்குத் திரும்பும். இந்த உலக ஆஸ்தி, உயர்ந்த கல்வி, உலக செல்வாக் குகள் ஒன்றும் அவைகளை நாடி தேடுபவர்கள் விரும்பும் மனநிறைவை கொடுப்பதில்லை. அவை பரலோகத்திற்கு செல் வதுமில்லை. எவரை யும் பரலோகத்தில் சேர்ப்பதும் இல்லை. எனவே ஆத்துமாவிற்கு அவசி யாமானதை நாடித் தேடுங்கள். பரம அழைப்பின் பந்தைய பொருளின் இலக்கை அடையும்வரை இளை;படையாமல் கிரியைகளை நடப்பியு ங்கள். ஆண்டவர் இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், அவனைக் கடைசிநாளில் எழுப்பு வதும், பிதாவாகிய தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

ஜெபம்:

மெய்யான போஜனத்தையும்இ, மெய்யான பானத்தையும் எங்களு க்கு அருளின பிதாவே, மறுபடியும் அழிந்து போகும் போஜனத்தை தேடி அழிந்து போகாதபடிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்து வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:6-9