புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 09, 2023)

மனதில் தோன்றும் வழிகள்

ஏசாயா 55:8

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.


இன்று பாடசாலை போக வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை, எனவே நான் வீட்டில் நிற்கப்போகின்றேன் என்று ஒரு பிள்ளையானவன் தன் தாயரிடம் சொல்லிக் கொண்டான். அதற்கு தாயானவள்: என்ன காரணம்? உனக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டாள். உடல் நிலையெல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது, ஆனால் பாடசாலைக்கு போக வேண்டும் என்ற மனவிருப்பம் இன்று எனக்கு இல்லை என்று பிள்ளையானவன் பதிலளித்தான். அப்படியயெல்லாம் உன் மனதிற்கு தோன்றியபடி நீ நடந்தால், நீ படி த்து பட்டம் பெறப் போவதில்லை. அடுத்த மாதம் முக்கிய பரீட்சை இரு க்கின்றது. எனவே சீக்கிரமாக ஆய த்தப்படு, நான் உன்னை பாடசாலை யிலே விட்டு விடுகின்றேன் என்று தாயானவள் கூறினாள். இப்படியான மனிதர்களுடைய வாழ்க்கையிலே மனவிருப்பங்கள் மாறிக் கொண்டே போகின்றது. அந்த மனவிருப்பங்களும், உணர்வுகளும் தேவ வார்த் தைகளுக்கு உட்பட்டிருந்தால், அது அவர்களுக்கு நன்மையை உண்டா க்கும். ஆனால், பொதுவாக மனிதர்கள் தேவன் நன்மை என்று நியமித்த காரியங்களை விட்டு, தாங்கள் தங்களுக்கு நன்மையாக தோன்றும் காரியங்ளை பற்றிக் கொள்கின்றார்கள். அது மட்டுமல்ல, அத்தகைய தங்கள் மாம்சம்சத்தின் உணர்வுகள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு விரோ தமாக இருந்தால், அப்படிப்பட்ட சட்டதிட்டங்களை மாற்றியமைபதற்கும் மனிதர்கள் இன்று அயராது உழைக்கின்றார்கள். இது உலகத்தின் போக்காக இருக்கின்றது. இன்று, வேதம் வாசிப்பதற்கு மனதில்லை. ஜெபிக்க வேண்டும் என்ற வாஞ்சை இல்லை. ஆராதனைக்கு செல்ல வேண்டும் என்ற உணர்வு இல்லை என்று நாம் நம்முடைய விசுவாச வாழ்க்கையை நம்முடைய உணர்வுகளின்படி வாழக் கூடாது. இப்படி யான மனச்சோர்வுகளும், அசதியும் நம் ஆவிக்குரிய போரட்டத்தை மேற் கொள்ள நாம் இடம் கொடுக்க கூடாது. ஏதாவது ஒரு நாளிலே வேத த்தை தியானம் செய்ய வேண்டும் என்று உணர்வு இல்லாதிருந்தால், அந்த நாளிலே இன்னும் அதிமாக வேதத்தை வாசியுங்கள். ஏனெனில் வாழ்வு தரும் வார்த்தைகள் அங்கே உண்டு. தேவனுடைய பாத்தத்திலே கருத்துடன் நேரத்தை செலவிடுங்கள். தேவனை அறிகின்ற அறிவுக்கு விரோதமான எல்லா சிந்தைகளையும், எண்ணங்களையும் கர்த்தருடைய வார்த்தையினாலே அழித்துப் போடுங்கள். கர்த்தருடைய வழிகள் உயர்ந்த வைகள். அந்த வழியிலே நடவுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நான் உமது சத்தியத்திலே நடக்கும்படி நீர் உமது வழியை எனக்குப் போதித்தருளும். நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:30