தியானம் (புரட்டாசி 08, 2023)
உணர்வுகளை ஆராய்ந்து பாருங்கள்
ரோமர் 8:13
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்
திருமண வயதிற்கு வந்திருந்த வாலிபனொருவன், தான் ஊரிலுள்ள குறிப்பிட்ட பெண்ணொருத்தியை திருமணம் செய்யப் போகின்றேன் என்ற தன் தீர்மானத்தை பெற்றோரிடம் அறிவித்தான். பெற்றோர் அவனுக்கு மறுமொழியாக: மகனே, நீ எப்படிப்பட்டவன் என்பது எங்களுக்கு நன் றாக தெரியும். இந்தக் காரியமா னது அந்தப் பெண்ணைக் குறித்த நிறைகுறை அல்ல. ஆனால், அந்தப் பெண் உன் வாழ்விற்கு பொருத்த மானவளல்ல. நீ நன்றாக சிந்தித்து தீர்மானம் செய்துகொள் என்றார் கள். அதற்கு மகனானவனோ: அப்பா, அம்மா, இது புதிய யுகம். நான் அவளை நன்றாக அறிந்திருக்கின்றேன். அவளை அதிகமாக நேசிக்கின்றேன். எங்களுக்கிடையிலே எதுவும் வரப்போவதில்லை. என் மனதிற்கு ஏற்றவளும், பொருத்தமானவளும் அவளே என்று கூறி, அவளை திருமணம் செய்து கொண்டான். பத்து ஆண்டுகள் சென்றபின், ஒரு நாள் அந்த மகனானவன், இராத்திரி வேளையிலே மிக தீவிரமாக பெற்றோ ரிடம் வந்து, நீங்கள் சொன்னது சரி, அவள் எனக்கு ஏற்றவளல்ல. அவளை நான் விவாகரத்து செய்யப் போகின்றேன் என்று தன் காரணங்களைக் கூறினான். தகப்பனானவர் அவனை நோக்கி: மகனே, பத்து வருடங்களு க்கு முன் நாங்கள் உனக்கு சொன்ன ஆலோசனையை நீ அசட்டை செய்தாய். இப்போதாவது, எங்கள் அறிவுரையை கேள். இப்போது அவள் 'அந்தப் பெண் அல்ல', அவள் உன் மனைவி! உன் பிள்ளைக ளின் தாயானவள்! நீ கூறும் காரணங்கள் எதுவும் ஏற்புடையதல்ல. ஒரு வரை ஒருவர் புரிந்துகொண்டு, மன்னித்து, விட்டுக் கொடுத்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கையின் தீர்மானங்களை உங் கள் உணர் வுகளின்படி எடுக்கக்கூடாது. முதலாவதாக, தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிய உங்களை ஒப்புக்கொடுங்கள் என்று அறிவுரை கூறினார். இன்று சில மனிதர்கள் தேவன் நியமித்த ஒழுங்குகளை தள்ளிவிட்டு, தங்கள் சொந்த உணர்வுகளின்படி வாழ்ந்து வருகின்றார்கள். இன்று என் உண ர்வு எப் படி இருக்கின்றதோ அப்படியே நான் என் தீர்மானங்களை எடு ப்பேன். நாளை உணர்வு மாறிப்போனால், என் தீர்மானத்தை மாற்றி விடு வேன் என்று தங்கள் மாம்சசிந்தைக்கு தங்களை ஒப்புக் கொடுக்;கி ன்றார்கள். உணர்வுகளின்படி நாம் வாழலாம் என்ற ஒழுங்கானது இந்த உலகத்தி னால் அங்கீகாரம பெற்று வருகின்றது, ஆனால், அது தேவனு டைய ஒழுங்கு அல்ல. உங்கள் மாம்சம் விரும்புவதை நீங்கள் நடப்பி க்காமல், தூய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு இடங்கொடுங்கள்.
ஜெபம்:
சகலமும் அறிந்த தேவனே, என் மனவிருப்பத்தை நான் நிறைவேற்றுகின்றவனாக வாழாமல், உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தேவசித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்ற என்னை வழிடநத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங் 119:1-9