தியானம் (புரட்டாசி 07, 2023)
வசீகரமாக தோன்றும் உலக வழிகள்
நீதிமொழிகள் 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த எஜமனனானவனொருவனுக்கு அழகான மாளிகையொன்று இருந்தது. அந்நியர்கள் அந்த மாளிகைக்குள் உட்பு காதடிக்கு பலத்த பாதுகாப்பு முறைமைகள் அமைக்கப்பட்டிருந்தது. முக்கிய அலுவலாக அவன் வெளியூருக்கு சென்று வரவேண்டியிருந் ததால், தன் மனைவி பிள்ளைகளை அழைத்து, அவர்களை நோக்கி: நான் இரண்டு கிழமைகளுக்கு வெளியூருக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. உங்களுக்கு வேண்டிய யாவையும் ஒழுங் குபடுத்தப்பட்டிருக்கின்றது. நான் திரும்பி வரும்வரைக்கும், இந்த பட்டியலிலுள்ள நபர்களைத் தவிர வேறு எவரையும், எந்தக் காரண த்தைக் கொண்டும் இந்த வீட்டிற் குள் அனுமதிக்க வேண்டாம் என் று திட்டமாகக் கூறி வெளியூருக்கு சென்றுவிட்டான். எஜமான னாவன் கூறிய பிரகாரமாக அவனுடைய குடும்பத்தினர் காரியங்களை செய்து வந்தார்கள். சில நாட்கள் சென்ற பின்பு, நேர்த்தியாக உடை களை தரித்து, செம்மையாகவும், மிருதுவாகவும் பேசும் வசீகரமான தோற்றத்தையுடைய மனிதனொருவன்;, அந்த மாளிகையின் வாசலில் வந்து அந்த குடும்பத்தினரை சந்தித்தான். தன்னை தரமான விற்பனை யாளனொருவனைப் போல காண்பித்த அந்த மனிதனானவன், அவர் களை நோக்கி: உங்கள் வீட்டின் கூரையிலே சில திருத்த வேலைகளு ண்டு என்றும், இந்த மழைநாட்களுக்கு முன் இவைகளை செய்ய வேண்டும் என்று எஜமானானானவர் கேட்டிருந்தார். நாங்கள் முதலில் கூரையை பார்வையிட வேண்டும். அவர் வீடு திரும்பிய பின் திருத்த வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று அவர்களோடு வசீகரமாக பேசி அவர்கள் மனதை கவர்ந்து கொண்டான். இப்படிப்பட்ட ஒழுக்கமுள்ள மனிதன் தீமை செய்யமாட்டான் என்று கருதி, எஜமானானவனின் அறி வுரையை மீறி, அந்த மனிதனோடு வந்த சில வேலையாட்களை வீட்டார் உள்ளே அனுமதித்தார்கள். அந்த வேலையாட்கள், அந்த வீட்டிற்குள் எப்படி நுழையலாம் என்பதை அறிந்து, அதற்கேற்ப சில உபாயங்களை செய்து, அன்றிரவுவே அந்த வீட்டை கௌ;ளையடித்தார்கள். பிரியமான வர்களே, இவ்வண்ணமாகவே, சில விசுவாசிகளும், தேவனுடைய ஆலோ சனைகளை அற்பமாக எண்ணி, நன்மையும், வசீகரமுமாகத் தோன்றும் இந்த உலகத்தின் கண்ணிகளை தங்கள் வாழ்வில் அனுமதிக்கின்றார் கள். நீங்களோ, உங்கள் உணர்வுகளுக்கு இடங்கொடுத்து, வஞ்சிக்க ப்பட்டு போகாதபடிக்கு;, கர்த்தர் கொடுத்திருக்கும் ஆலோசனைகளை காத்து நடவுங்கள்.
ஜெபம்:
என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமான தேவனே, தேவரீர், நீர் என் சுதந்திரத்தை காப்பற்றுகின்றவர். நான் சாத்தானின் வஞ்சகமான கண்ணிக்குள் அகப்படாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 16:7-8