புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 06, 2023)

பார்வைக்கு செழிப்பானவைகள்

சங்கீதம் 37:5

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.


தன் பட்டப்படிப்பை முடித்து, புதிதாக வேலைக்கு சேர்ந்த வாலிபனானவன், தன் இயக்குனரைக்குறித்து பெருமையாக பேசிக் கொண்டான். உலகத்திலேயே பிரபல்யமான பல்கலைகழகத்திலே மேற்படிப்புகளை அதி விசேஷட சித்தியோடு முடித்து, மிகவும் குறுகிய காலத்திலே பத வியுயர்வுகளை பெற்று, தன் இளவயதிலேயே சிரேஷ;ட இயக்குனராக வேலை செய்கின்றார். தானும் அவ ருடைய வழியை பின்பற்ற வேண்டும் என்று அவரை தன் நல் நம்பகமான ஆலோசகராக (Mentor) ஏற்படுத்திக் கொண்டான். உலகத்தைக் குறித்து எந்த அனுபவமும் இல்லாத தன்; மக னானவனுடைய வழிகள் சற்று மாற் றமடைவதைக் கண்ட தகப்பனானவர், தன் மகனை அழைத்து அவனோடு பேசினார். மகனே, நீ உன்னுடைய இயக்குனருக்கு கனத்தை கொடு ப்பது நல்லது. ஆனால் நீ அவரை உன் வாழ்வின் நம்பகமானதொரு ஆலோசகராக வைத்திருப்பதைக் குறித்து எச்சரிக்கையாயிரு. ஒரு மனி தனுடைய வாழ்வின் வெற்றியின் ஒருபக்கத்தை மட்டும் பார்க்காதே. உன் இயக்குனர் உன் வயதில் இருக்கும் போது தேவனுக்கு பயந்து நடந்தாரா? இப்போது அவருடைய நம்பிக்கை என்ன? அவருடைய இல க்கு என்ன? என்று அவருடைய வாழ்க்கையின் எல்லா பக்கத்தையும் அறிந்த பின்னர் அவரை உன் முன் மாதியாக வைத்துக் கொள். கர்த்த ருக்கு பயந்து அவர் வழியில் நட, நீ ஞானியாக நடந்து கொள்வாய் என்று ஆலோசனை கூறினார். தன் தகப்பனானவர், கல்வி கற்கவி ல்லை. உலகத்தின் நடப்புக்கள் அவருக்குத் தெரியாது என்ற எண்ணம் அவனுக்கு இருந்ததால், அவன் தகப்பனானவருடைய ஆலோசனையை அற்பமாக எண்ணிக் கொண்டான். பல மாதங்கள் சென்ற பின்னர், அந்த இயக்குனர், அந்த வாலிபனை நோக்கி: நான் வீட்டிலே இருக்கும் நேரம் குறைவு. ஆதலால்;, மனைவிக்கும் எனக்கும் இடையிலான உறவு உறு தியாக இல்லை. ஆனால், நான் அவளுக்கும் பிள்ளைகளுக்கும் வேண் டிய யாவற்றையும் மிகையாக கொடுத்து வருகின்றேன். பணம் இரு ந்தால் நீ எல்லாவற்றையும் உன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காலம் என்று அறிவுரை கூறினார். அதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த அந்த வாலிபனானவனின் மனக்க கண்கள் திறக்கப்பட்டன. அன்றிரவே தன் தகப்பனானவர் கூறிய நல்ல ஆலோசனையை குறித்து சிந்தித்து, தன் வழியை கர்த்தருக்கு ஒப்புவிக்க தீர்மானித்துக் கொண்டான்.

ஜெபம்:

பரலோக தகப்பனே, இந்த உலகத்தின் போக்கில் வாழ்கின்றவர்களின் செழிப்பிலே நான் மயங்கிவிடாதபடிக்கு என்னை காத்து, உம் வழியில் நடக்க உணர்வுள்ள இருதயத்தை தந்த வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7