புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 05, 2023)

யாருடைய ஆலோசனை நல்லது?

நீதிமொழிகள் 1:9

அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.


கல்வி கற்று, பட்டம் பெற்று, நல்ல உத்தியோகத்தை செய்து வரும் ஒரு ஸ்திரியானவள், பாடசாலையிலே உயர்தரத்திலே கல்வி கற்று வரும் மாணவியானவளுக்கு வாழ்க்கையை குறித்த தன் ஆலோசனைகளைக் கூறினாள். 'நீ உன் பெற்றோரின் வார்த்தையையும் கேட்டு அதன்படி செய்யத் தேவையில்லை, என்னுடைய அறிவுரைகளிலும் கூட நடக்;கத் தேவையி ல்லை. உன் இருதயம் உனக்கு என்ன சொல்கின்றதோ எது உனக்கு சரியாக தெரிகின்றதோ அதையே நீ செய்' என்று ஆலோ சனை கூறினாள். அந்த அறிவரை யானது அந்த மாணவியின் மன திற்கு இதமாக இருந்தது. அவ ளுடைய முகம் மலர்ந்தது. அவ ளுடைய மனதின்; உணர்வுகளை துண்டிவிட்டது. தன்னுடைய அறி வுரையையும் கேட்க வேண்டாம் என்று ஆலோசனை கூறிய அந்த ஸ்தி ரியானவளின் ஆலோசனையே அந்த மாணவி ஏற்றுக் கொண்டாள். என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழு த்துக்குச் சரப்பணியுமாயிருக்கும். (நீதி 1:8-9). உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு ந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதி 3:5-6) என்று பரி சுத்த வேதாகமத்தின் ஆலோசனை அற்பமாக எண்ணுகின்ற மனிதர்கள், கர்த்தருக்கு பயப்படுதலை அற்பமாக எண்ணுவதால், அவர் கள் தேவ ஞானத்தை நிராகரிக்கின்றார்கள். தங்கள் சுயஞானத்திற்கு இடங்கொடு த்து, அதன்படி வாழ்க்கையை நடத்துகின்றார்கள். உன் கனவை நீ பின்பற்று என்ற சித்தாந்தத்தையே மேற்கத்தைய திரைப்படங்கள், நேர டியாகவோ, மறைமுகமாகவோ, பிள்ளைகளின் மனதிலே திணிக் கி ன்றது என்று ஒரு மேற்கத்தைய நாட்டை சேர்ந்த போதகர் கூறினார். மேலும், மனிதர்களுடைய சித்தாந்தங்களை குறித்து எச்சரிக்கையா யிருங்கள் என்று அவர் அறிவுரை கூறினார். தேவனுடைய விசுவாசக் குடும்பத்தாராகிய நாம், பிள்ளைகளுக்கு தேவ ஞானத்தை கற்று கொடு க்க வேண்டும். பிள்ளைகள் மாத்திரமல்ல, வளர்ந்தவர்களும், இந்த உலக சித்தாத்தங்களை குறித்து விழிப்புள்ளவர்களாக இருக்க வேண் டும். அவைகள் கேட்பதற்கு இதமாக இருக்கும். குறுகிய காலத்திற்கு நலமாக தோன்றும், இறுதியிலே, அவைகள் உங்களை படுகுழிக்குள் தள்ளிவிடும்.

ஜெபம்:

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; என்று உரைத்த தேவனே, உம்முடைய ஆலோசனையின் வழியிலே நான் எப்போதும் நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 73:24