புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 04, 2023)

உங்களை குழப்புகின்றவர்கள் யார்?

கலாத்தியர் 6:7

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.


வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். இதை குடிக்கக்கூடாது என்று ஆண் டவர் உனக்குச் சொன்னாரோ? இதைப் பார்க்கக்கூடாது என்று ஆண்ட வர் உனக்கு கூறினாரோ? என்று ஒரு மனிதனானவன் ஒரு விசுவாசியா னவனை அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டிருந்தான். அந்த மனித னோடு வாக்குவாதம் செய்வதில் பயனில்லை என்று உணர்ந்து கொண்ட அந்த விசுவாசியானவன், அவனை நோக்கி: தேவன் நம்மை பரிசுத்தத் திற்கென்று வேறு பிரித்தார். நீ வெறி கொண்ட பின்பு, உனக்குள் வரும் சிந்தனைகளும், நீ பேசும் பேச்சுக்க ளையும் நீ ஆராய்ந்து பார். நீ நெறி கெட்ட திரைப்படங்ளைப் பார்த்து ஆகாத கதை வசனங்களை கேட்கி ன்ற போது உன் சிந்தை எதனால் நிறைந்திருக்கின்றது என்று எண்ணிப்பார். மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறு ப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே நீ எதை விதைக்கின்றாய் என்பதைக் குறித்து எச்சரிக்கையாயிரு என்று அந்த மனிதனானவனுக்கு விசுவாசியானவன் பதில் கூறினான். அந்த மனிதனா னவன், அந்த விசுவாசியைக் காணும் வேளைகளிலெல்லாம், தனக்குள் உண்டாகும் குற்ற உணர்வினாலேயே, இதை குடிக்காதே, அதை பார் க்காதே என்று தேவன் கூறினாரோ என்ற கேள்வியை கேட்டுக் கொண் டான். நாம் பரிசுத்த வேதாகமத்;தை ஆராய்ந்து பார்ப்போமென்றால், இத்தகைய தொனியிலே பேசியது யார் என்பதை காணமுடியம். 'நீங் கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவே ண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ' என்று சர்பமாகிய பிசாசா னவன், பாவமறியாத ஏவாளை கேட்டான். உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்த யோபுவைக் குறித்து விஷயத்தில், சாத்தான் கர்த்தரை நோக்கி கூறிய தாவது: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? பிரியமானவர்களே, பிரதிஷ;டை யுள்ள உங்கள் பரிசுத்த வாழ்க்கைக் குறித்து பரிகாசம் பண்ணி, விதண்டா வாதம் பண்ணுகின்றவர்களைக் குறித்து, குழப்பமடையாமல், மன உறுதியடன் தேவனுக்குள் முன்னேறுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, பரியாசக்காரின் வார்த்தைகளினால் நான் சோர்ந்து போய், இந்த உலகத்தின் முறைமைகளுக்கு இடங்கொடு க்காதபடிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:14-16