புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 03, 2023)

கணக்கு கொடுக்கும் காலம் சமீபம்

1 பேதுரு 4:5

உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.


ஒரு வாலிபனானவன், குடித்து வெறிக்கும் பழக்கமில்லாதவனாகவும், நெறிகெட்ட திரைப்படங்களை பார்க்காமலும், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவனாகவும், களியாட்டங்களிலே ஈடுபடாதவனாகவும் வாழ்ந்து வந்தான். அதைக் கண்டு கொண்ட அவனுடைய வயதுக்கொத்த மற் றய வாலிபர்கள் சிலருக்கு அது மிகவும் நகைப்புக்குரியதாக இருந்தது. வேறு சிலர், அவனைக் கண்டதும் மனதில் எரிச்சலடைந்து புறம்போ க்கன் வருகின்றான் என்று சொல் லிக் கொள்வார்கள். இன்னும் சிலர் அவனோடு எப்போதும் விதண்டா வாதம் செய்து கொண்டே இருந் தார்கள். நாம் ஆண்டவர் இயே சுவை அறிய வேண்டிய பிரகார மாக அறிய முன்பு, இந்த உல கத்தின் இஷ;டத்தின்படி நடந்துகொண்டு, காமவிகாரத்தையும் துர்இச்சை களையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறி கொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். அப்படியாக, துன்மார்க்க உளையிலே வாழ்ந்து கொண்டிருந்த நம்மை, நம் ஆண்டவராகிய இயேசுதாமே, தூக்கியெடுத்து, நம் பாவங்கள் நீங்க நம்மைக் கழுவி சுத்திகரித்தார். தம்முடைய திவ்விய ஒளியை நம்மில் பிரகாசி ப்பிக்கப் பண்ணினார். அதனால் நம்முடைய மனக் கண்கள் பிரகாசம் அடைந்தது. தற்போது, உலகத்திற்குரிய துன்மார்க்க உளை யிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷpக்கிறார்கள். அவர்களும் அழிந்து போகாமல் மீட்கப்படும்படி, அவர்களுக்கும் சுவிசேஷமானது அறிவிக்க ப்பட்டது. (1 பேதுரு 4:3-6) 'ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனு ஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர் கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர் ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளி யைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியி னிடத்தில் வராதிருக்கிறான்' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கி ன்றார். (யோவான் 3:19-20). எனவே, உங்கள் நல்;நடக்கைகளைக் குறி த்து பரியாசம் பண்ணுகின்றவர்களைக் கண்டு சோர்ந்து போய்விடாதி ருங்கள். எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ள வர்களாயிருங்கள். உங்களை அழைத்தவர் உங்களோடு இருக்கின்றார்.

ஜெபம்:

பரிசுத்தத்திற்கென்று என்னை வேறுபிரித்த தேவனே, மாம்ச இச்சையை நிறைவேற்றாதபடிக்கும், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளும் படிக்கு, எனக்கு உற்சாகத்தின் ஆவியை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலா 5:19-21