புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 02, 2023)

இது என் எஜமானனானவனின் சத்தம்

யோவான் 10:4

ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.


ஒரு கிராமத்திலே, அதிகாலை வேளையிலே, வழமைபோல வயலிலே வேலையாட்கள், நாற்றுக்களை பராமரித்துக் கொண்டிருந்தார்கள். தீரெ ன்று அந்த வயலின் அருகே இருந்த குறுகிய பாதை வழியாக, பட்ட ணத்திலிருந்து வந்த வாலிபனானவ னொருவன், மோட்டார் சைக்கிளை மிக வேகமாக ஓட்டிச் சென்றான். அந்த வேளையிலே, வயலின் ஒரு பக்கமாக இரு ந்த மரங்களில் தங்கியிருந்த பற வைகள் யாவும், சற்றும் காலம் தாமதி க்காமல், கூட்டமாக பறந்து சென்று விட்டன. வயலின் வேலை யாட்கள், தங்கள் வேலைகளை நிறுத்தி, வழமைக்கு மாறாக ஒரு புதிய காரிய மொன்று நடக்கின்றதே என்று புதினமாக தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தார்கள். மிருகங்கள், பறவைகள் யாவும் வழமைக்கு மாறான அந் நிய சத்தங்களை கேட்கும் போது, அவைகள் யாவும் அந்த இடத்தை விட்டு, உடனடியாக சென்றுவிடுகின்றது. அவைகள் ஒன்று கூட நின்று, இந்த விநோதமான காரியத்தை பார்ப்போம் என்று ஒருபோதும் கூறுதி ல்லை. ஆனால், மனிதனோ, அந்நிய காரியங்களையும், விநோதமான வைகளையும் அறிய விருப்பமுள்ளவனாக இருக்கின்றான். அனுதின மும், இந்த உல கத்தின் சத்தமும், மாம்சத்தின் சத்தமும், பிசானசான வனின் வஞ்சகமான சத்தமும் இணைந்து ஒலிக்கின்றது. அவைகள் மத்தியிலும் நம்முடைய மேய்ப்பனாகிய இயேசுவின் சத்தமும் தொனி க்கின்றது. எனவே, மனிதனானவன், தன்னுடைய எஜமானனாகிய இயே சுவின் சத்தம் எது என்பதை நன்றாக அறிந்திருக்க வேண்டும். இன்று பல மனிதர்கள் எஜமானானாகிய இயேசுவின் சத்தத்தை அசட்டை செய் கின்றார்கள். அவர்களுக்குள் சில விசுவாசிகளும் தங்களை சிக்க வைத் துக் கொள்கின்றார்கள். மாடு தன் எஜமானனையும், கழுதை தன் ஆண் டவனின் முன்னணையையும் அறியும்; தன்னுடைய ஜனங்களோ அறி வில்லாமலும், உணர்வில்லாமலும் இருக்கின்றார்கள் என்று தேவனாகிய கர்த்தர் தாம் அழைத்த தம்முடைய ஜனத்திற்கு கூறினார். இன்று சிலர், அதை அறிந்தால் என்ன? இதை தொட்டால் என்ன? என்று தாம் அறி யாத அந்நிய காரியங்களுக்குள் துணிகரமாக நுழைகின்றார்கள். நீங்க ளோ, மேய்ப்பனாகிய ஆண்டவர் இயேசுவின் சத்ததை திட்டமாக அறி ந்து கொள்ளுங்கள். வேதத்தை வாசியுங்கள், வாசித்தவைகளை தியா னியுங்கள். எல்லாவற்றையும் வேத வார்த்தையின் வெளிச்சத்தில் சோதி த்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்கா ய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

ஜெபம்:

என் எஜமானனாகிய தேவனாகிய கர்த்தாவே, நான் ஒரு போதும் அந்நிய சத்தங்களை கேட்டு, ஜீவ வழியைவிட்டு, அழிவின் பாதைக்கு சென்றுவிடாதபடிக்கு என்னை காத்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 10:16