புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 01, 2023)

தேவன் எங்கே?

யோவான் 10:10

நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.


ஒரு தேசத்திலே ஏற்பட்ட எதிர்பாராத பயங்கரமான அழிவினால், பாரிய இழப்புக்களும், பெரிதான பாதிப்பும் ஏற்பட்டது. அந்த வேளையிலே தேவன் எங்கே? ஏன் இத்தகைய பேரழிவு என்று சில கூட்டத்தைச் சேர்ந்த மனிதர்கள் குரலெழுப்பினார்கள். தேவன் எப்போதும் இருக்கி ன்றவராய் இருக்கின்றார். தேவன் ஒருபோதும் மாறாதவராய் இருக் கின்றார் என்றும் உங்கள் வாழ்க்கை யிலே தேவனை நீங்கள் எங்கே வை த்திருக்கின்றீர்கள் என்றும் ஒரு போத காரனவர் கேட்டார். தங்கள் சரீரமா னது, தாங்கள், தேவனாலே பெற்றதும், பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் ஆலயமாயிருக்கிற இருக்கின்றதென் பதை அற்பாக எண்ணி, தங்கள் சரீர ங்களை தீட்டுப்படுத்தி, தங்கள் இரு தங்களை கேளிக்கை விடுதிகளைப் போல மாற்றியது யார்? குடும் பத்திலே, பாடசாலைகளிலே, தேசத்திலே தேவன் போட்ட பாதுகாப்பின் எல்லைகளை தகர்த்து, திருடனை உள்ளே விட்டது யார்? திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூ ரணப்படவும் வந்தேன் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கி ன்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் தேவனாகிய கர்த்தர் நம் முன்னே வைத்திருக்கின்றார். ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் கர்த்தராகிய இயேசு வந்தார். திருடனாகிய பிசாசானவன் ஆதிமுதல் வஞ்சிக்கின்றவனாகவே இருக்கின்றான். அவனுடைய தந்திரங்கள் நல்ல தும், இன்பமும், புத்தியை தெளிவிக்கின்றது போலவும் இருக்கும். இவை யாவும் இந்த உலகத்தின் போக்கிற்குள் உட்பட்டிருக்கின்றது. சில தேவபிள்ளைகள் கூட, ஏவாளைப் போல தேவனுடைய ஆலோசனை களைத் தள்ளிவிட்டு, இந்த உலகத்தின் போக்கிற்கு இடங் கொடுக்கி ன்றார்கள். அவர்கள் வழியாக குடும்பங்களும் தேவனைவிட்டு தூரம் சென்று விடுகின்றது. குடும்பங்கள் வழியாக சமுகங்களும், சமுகங்கள் வழியாக தேசமும் தீட்டுப்பட்டுப் போகின்றது. மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலு ள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலக த்தினாலுண்டானவைகள். எனவே பொல்லாங்கனாகிய பிசாசானவனிற் கும் உலக போக்கிற்கும் சற்றும் இடங் கொடுக்காமல், ஆண்டவர் இயேசுவின் சத்தத்திற்கு செவிகொடுப்போமாக.

ஜெபம்:

என்மேல் உம் கண்ணை வைத்து ஆலோசனைகளை தந்து நடத்தும் தேவனே, நான் உம்முடைய ஆலோசனைகள் ஒன்றையும் அற்பமாக எண்ணாமல், அதற்குள் வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபா 8:11-19