புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 31, 2023)

காலமும், உலகமும், மனிதர்களும்

ரோமர் 12:2

உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.


காலங்கள் மாறிப் போயிற்று. உலகம் மாறிப் போய்க் கொண்டே இருக்கின்றது. நன்மைகளை பெற்ற மனிதர்களும் சீக்கிரமாய் மாறி போய்விடுகின்றார்கள் என்று ஒரு விசுவாசியானவன் தன் மேய்ப்பரோடு பேசிக் கொண்டிருந்தான். அவன் குரலின் தொனியிலே அதிருப்தியும் சலிப்பும் கலந்திருப்பதை மேய்ப்பரானவர் அவதானித்துக் கொண்டார். இதினிமித்தம் அந்த மேய்ப்பரான வர், அந்த விசுவாசியானவனை தனி யாக சந்தித்து பேசினார். மகனே, நீ கடந்த கிழமை பேசிய காரி யங்களிலே உண்மை உண்டு. காலத்தோடு, உலகமும் அதன் போக்கும் மாறிக் கொண்டு தான் போகின்றது. மனிதர்களிலும் பலர் உலகத்திற்கு ஒத்த வேஷத்தை தரித்தவர்களாய் தங்களை காலத்திற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்கின்றார்கள். இது ஒரு புதிதான இரகசியம் அல்ல. ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்;த முன்னோடிகளான பரிசுத்தவான்கள், தங்கள் நாட்களிலே, இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்காமல், தங்கள் வாழ்வை காத்துக் கொண்டார்கள். எப்படி அதை செய்தார்கள்? தங்களை சூழ உள்ள மனிதர்கள் உலகத்திற்கு ஒத்தவர்களாய் மாறிக் கொண்டிருக்கின்ற வேளையிலே, தங்களுக்குள் இருக்கும் உள்ளான மனிதன் நாளுக்கு நாள் இயேசுவின் சாயலடையும் படி அவர்கள் இடங் கொடுத்தார்கள். அதனால் அவர்கள் இந்த மாறும் உலகத்தையும், அதன் போக்கில் வாழும் மனிதர்களையும் கண்டு அதி ருப் தியடையாமலும், சலிப்படையாமலும், இந்த உலகத்திலே வாழு ம்வரை ஆண்டவர் இயேசுவிலிருந்த சிந்தையோடு வாழ்ந்தார்கள் என்று அறிவுரை கூறினார். ஆம் பிரியமானவர்களே, கோணலும் மாறு பாடு மான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும், கபடற்றவர்களும், தேவ னுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு நாம் எல்லாவற் iறும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்ய வேண்டும். நாம் நலன்விரும்பிகளாக அல்ல முதன்மையான விசுவாசிகளாக வாழ வேண்டும். நலன்விரும்பிகள் மற்றவர்களுடைய வாழ்க்கை மாற வேண் டும் என்கின்ற எண்ணமுடையவர்களாக இருக்கின்றார்கள். அது நல்லது. ஆனால் அதைவிட என்னுடைய உள்ளான மனிதன் நாளுக்கு நாள் கிறி ஸ்துவின் சாயலிலே வளர வேண்டும் என்பது விசுவாசிகளுக்கு மிகவும் இன்றியமையாதது. எனவே, நம்முடைய ஆண்டவர் இயேசுவைப் போல, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யும்படிக்கு அவருடைய சாயலிலே வளர்ந்து பெருகுவோமாக.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கென்று என்னை வேறு பிரித்த தேவனே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவின் சாயலிலே நான் அனுதின மும் வளர்ந்து பெருகும்படிக்கு உணர்வுள்ள வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:8