புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 30, 2023)

சுமை அதிகமாயிருக்கின்றதே!

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த முதியவரொருவர், நதியின் அக்கரைக்கு போகும்படிக்கு, தன் இரண்டு தோள்களிலும், பொருட்கள் நிறைந்த பையை போட்டுக் கொண்டு, யாவராவது தன்னை படவிலே கொண்டு சென்று விடுவார்களா என்று காத்திருந்தார். அந்த முதிவரைக் கண்ட படகோட்டியொருவன், அவர்மேல் இரக்கங் கொண்டு, அவரை நோக்கி: ஐயா, என்னுடைய படகிலே ஏறிக் கொள்ளுங்கள், நான் உங்களை அக்கரைக்கு கொண்டு செல்கின் றேன் என்று கூப்பிட்டான். முதியவ ரும், மகிழ்ச்சியோடு படகிலே ஏறி, பொருட்கள் நிறைந்த பைகளை தோளில் போட்டுக் கொண்டு நின் றார். ஒரு பக்கமாக நின்று கொண் டிருந்தார். அதைக் கண்ட படகோ ட்டி, அவரை நோக்கி, ஐயா, பார த்தை தூக்கியபடி நிற்கின்றீர்களே, சற்று இறக்கி வைத்து, இளைப்பாறு ங்கள் என்று கூறினான். ஆனால், முதியவரோ, பாரங்களை இறக்க மன தில்லாமல், தன் பாரத்தை தூக்கியபடியே படகில் நின்று கொண்டிரு ந்தார். பிரியமானவர்களே, இன்று சமாதானமான வாழ் விற்கு அழை ப்பை பெற்றவர்கள் பூரண சமாதானத்தை அனுபவிக்க முடியாமல் இரு க்கின்றார்கள்? ஆரம்பத்திலே உற்சாகமாக கிறிஸ்துவுக்குள் வாழ்ந்த வர்கள், ஏன் பாதி வழியிலே சோர்ந்து போய்விடுகின்றார்கள்? தங்கள் வாழ்விலே பல நற்கிரியைகளை செய்து வந்தாலும், ஏன் நன்மையை உணரமுடியாமல் இருக்கின்றது? வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர் களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அவரிடத்தில் வந்த பின்பும், சிலர் கொண்டு வந்த சுமைகளை இறக்கி வைக்காமல், தூக்கிச் சுமக்கின்றார்கள். வேறு சிலர், ஆண்டவர் இயேசுவிடம் வந்தபி ன்பும், இந்த உலகத்தின் மேலுள்ள ஆசையினால் இழுப்புண்டு, அநாவ சியமான சுமைக்ளை மறுபடியும் தூக்கிவிடுகின்றார்கள். நாளைய தின த்தைக் குறித்து கவலை படாதிருங்கள் என்று ஆண்டவர் இயேசு கூறி யிருக்கின்றார். கவலைகளும், பயங்களும் சூழ்ந்து கொள்ளும்போது, அவைகளை இயேசுவின் பாதத்திலே இறக்கி வைத்து விடுங்கள். புதிய சுமைகளை தூக்கிவிடாமல், வேத வார்த்தைகளுக்கு கீழ்படிந்து சமாதானமான விசுவாச வாழ்வை வாழுங்கள்.

ஜெபம்:

சமாதானமான வாழ்விற்கு என்னை அழைத்து தேவனே, சுமைகள் யாவையும் உம்முடைய பாதத்திலே இறக்கி வைத்து, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நான் வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33