தியானம் (ஆவணி 29, 2023)
இயேசு இல்லாமல் வாழ்வு இல்லை
யோவான் 15:6
ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்;
என்னிடத்திலே கல்வி தகமைகள் உண்டு. என் பெயரில் சொத்துக்கள் உண்டு. சட்டப்படி தேசத்திலே பாதுகாப்பு உண்டு என்று தங்கள் சொந்த வீட்டைவிட்டு தூரமாய் போய், தங்கள் இஷ;டப்படி வாழும் மதியீ னமான பிள்ளைகளைப் போல நீங்கள் ஒருபோதும் ஆண்டவராகிய இயேசுவை விட்டு தூரமாய் சென்றுவிடாதிருங்கள். சில வேளை களிலே, விசுவாசிகளின் வாழ்வில் குற்ற உணர்வுகள் தலைதூக்கி விடு கின்றது. இப்படி எத்தனை முறை நான் தவறிப்போகப் போகின்றேன்? என்ற கேள்வியை தங்களுக்கு தாங்களே கேட்டு, நான் திருந்திய பின்பு ஆண்டவர் இயேசு விடம் வருவேன் என்று கூறி முதலாவ தாக சபை கூடிவருதலை விட்டு விடுகின்றார்கள். பின்பு படிப்படியாக வேதத்தை தியானிப்பதையும், ஜெபிப்பதையும் நிறுத்தி விடுகின்றார்கள். மனிதர்கள், மனந்திரும்பி அல்லது மனந்திருந்தி வாழ தேவையான ஜீவ வழியை விட்டு தங்களை தாங்களே இந்த உலக போக்கிற்கு அடிமைகளாக ஒப்படை த்து விடுகின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, ஆண்டவர் இயேசு இல்லாத வாழ்வு பலைவனத்தை போன்ற வறண்ட வாழ்வு. ஒரு சமயம், ஆண்டவாகிய இயேசுதாமே, தம்மை பின்பற்றியவர்களின் உண்மை யான நிலைமையை அவர்களுக்கு வெளிப்படுத்தி, நித்திய வாழ் வை அடையும் வழியைப் பற்றி அவர்களுக்கு போதித்த போது, அநேக ஜனங்கள் ஆண்டவர் இயேசுவை விட்டு பின்வாங்கி சென்றுவிட்டார்கள். அந்த வேளையிலே, ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: நீங்களும் போய்விட மனதாய் இருக்கின்றீர்களா என்று கேட் டார். அதற்கு சீமோன் பேதுரு என்னும் சீஷன் மறுமொழியாக: நாங்கள் யாரிடத்திலே போவோம் ஆண்டவரே, நித்திய ஜீவனைக் கொடுக்கும் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு என்று அறிக்கையிட்டான். ஆம், நம் ஆண்டவராகிய இயேசுவே பரலோத்தின் வழியாக இருக்கின்றார். அவரையன்றி ஒருவரும் பிதாவினித்தில் சேர முடியாது. எனவே, வாழ் வில் ஏற்படும் பின்னடைவுகளினாலோ, அல்லது உங்கள் பொருளாதார வளர்ச்சியினாலோ, உணர்வற்றவர்களாய் ஆண்டவர் இயேசுவைவிட்டு பின்வாங்கிப் போய்விடாதிருங்கள். எக்காலத்திலும், எல்லா சூழ்நிலை களிலும் அவரையே அண்டிக் கொள்ளுங்கள். அவர் நமக்காக தம் ஜீவ னையே கொடுத்தவர். ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார்.
ஜெபம்:
உம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை நமக்காக கொடுத்த தேவனே, இரட்கர் இயேசு இல்லாமல் வாழ்வு இல்லை என்பதை நான் எப்போதும் உணர்ந்தவனாக அவரிலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 14:6