புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 28, 2023)

பலன் கொடுக்கும் மரங்கள்

கலாத்தியர் 6:9

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.


அப்பா, எங்களிடத்தில் உதவியை பெற்றவர்களைப் பாருங்கள், எவ்வளவு வசதியாகவும், உல்லாசமாகவும், இடாம்பீகரமான வீடு வாசல்களோடு செழித்திருக்கின்றார்கள். ஆனால், தானதர்மங்கள் என்று வாரி இறைத்த நீங்கள் அப்படியே இந்த வீட்டிலே இருக்கின்றீர்களே என்று ஒரு மகனானவன், தன் தகப்பனானவரிடம் கூறினான். அதற்கு தகப்பனானவர் மறுமொழியாக: அப் படியல்ல மகனே, நான் ஒரு ஆசி ரியர். இந்த ஊரிலே என்னிடம் கல்வி கற்ற மாணவர்கள் இன்று பிரபல்யமான வத்தியர்களாகவும், பெயர்பெற்ற வைக்கீல்களாவும், பல தொழித்துறைகளிலே இருக்கின்றார்கள். இந்த ஊரைக் குறித்தும், ஊரின் கஷ்டத்தின் மத்தியில் வாழும் மக்களை குறித்தும் அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். ஏனெனில், அவர்களில் பலர் அவ்வண்ணமாகவே இருந்தார்கள். நான் என க்கு கொடுக்கப்பட்ட அழைப்பை கருத்தோடு செய்து வருகின்றேன். உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. மற்றவர்கள் தங்கள் அழைப்பை மறந்து போய்விடு வதினால், நாங்களும் அப்படியிருக்கலாகாது. மாங்கன்றுகளை நடுகின்றவன், அது வளர்ந்து சுவையான அதிக கனிகளை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்போடே, அந்த கன்றுகளை நட்டு, நீர்பாய்ச்சி, பசளை போட்டு பராமரிக்கின்றான். சில மரங்கள் வளர்ந்து புளிப்பான பழங்களை கொடுப்பதால், அவன் புதிய மாங்கன்றுகளை நடுவதை நிறுத்தி விடுவதில்லை. நல்ல நிலத்தில் விழுந்தவைகள் வளர்ந்து அது அதிக பலன் கொடு ப்பது போல, நல்ல கனிகளை கொடுக்கும் மரங்களும் உண்டு. எனவே, மற்றவர்கள் சுயநலத்துடன் வாழ்ந்தால் அவர்கள் அதற்குரிய பலனை அடைவார்கள். பலனற்ற மரங்களை கண்டு சோர்ந்து போகாமல், நாங் கள் எப்போதும் பலன் கொடுக்கின்ற மரங்களாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார். பிரியமானவர்களே, மற்றவர்களுடைய நன்றியற்ற வாழ்க்கையைக் கண்டு சோர்ந்து போய்விடாதிருங்கள். நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள், சிருஷ்டி க்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். (எபே 2:10). தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் நம்மில் உண்டாகியிருக்கின்றார். எனவே அவருடைய சித்தம் நம்மில் நிறைவேற இடங் கொடுப்போமாக.

ஜெபம்:

நன்மைசெய்வதிலும், தானதர்மம்பண்ணுவதிலும் பிரியமாயிருக்கின்ற தேவனே, நான் நன்மை செய்வதில் ஒரு போதும் சோர்ந்து போகாதிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:16