தியானம் (ஆவணி 27, 2023)
உலகத்தை அனுபவித்தால் என்ன?
எபிரெயர் 13:14
நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.
சில குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து, அநேக நாட்களாக குறிப்பிட்ட ஊரொன்றை நோக்கிப் பிரயாணப்பட்டு கொண்டிருந்தார்கள். பரவசத் தோடு பிரயாணத்தை ஆரம்பித்தார்கள். போகும் வழியில் எல்லா சூழ்நிலைகளும் அவர்களுக்கு சாதகமானதாக இருக்கவில்லை. சில நாட்களிலே, பகலிலே வெயிலின் உஷ;ணமும், இரவிலே குளிரும் அதி கமாக இருந்தது. சில இடங்களிலே கண்ணை கவரும் காட்சிகளை கண் டார்கள். செழுமையாக தோன்றும் இட ங்களை கண்டபோது, சிலர் அந்த இடத்திலேயே தரித்து நின்றுவிட்டார் கள். உற்சாகத்தோடு ஆரம்பித்த பிர யாணம், இடைவெளிலே மந்த நிலையை அடைந்தது. எத்தனை நாட் கள் நாங்கள் நடோடிகளைப் போல, இப்படியாக பிரயாணம் செய்ய வேண்டும் என்று பிள்ளைகளில் சிலர் சலித்துக் கொண்டார்கள். ஆனாலும், பல இன்னல்கள், சவால்கள் மத் தியிலும், நாங்கள் குறித்த ஊருக்கு போவோம் என்ற உறுதியுடன் ஒரு சிலர் முன்னேறிச் சென்றார்கள். ஆம், பிரியமானவர்களே, நித்திய ஜீவனை பற்றிக்கொள்ளும்படி தேவனின் பரம அழைப்பை நாங்கள் பெற்றிருக்கின்றோம். இந்த பூமியிலே யாத்திரிகளாக கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். பல நெருக்கங்கள், இன்னல்கள், கஷ;டங்கள், உபத்திரவங்கள் மத்தியிலும், இந்த உலகம் தரும் தற்காலிகமான சந்தோ ஷத்தை நாடாமல், முடிவில்லாத வாழ்வை நோக்கி பயணம் செய்கின் றோம். எத்தனை நாட்கள் இப்படியாக நாம் யாத்திரை செய்ய வேண் டும்? நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகி றேன் (பிலிப்பியர் 3:12) என்று தேவ ஊழியராகிய பவுல் கூறியிருக்கின்றார். பாரங்கள் அதிகமாக இருக்கின்தே எனவே இடையில் நின்றால் என்ன? இந்த உலகத்தை சற்று அனுபவித்தால் என்ன? நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை. எங்கள் புறம்பான மனுஷனா னது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படு கிறது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்மு டைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டா க்குகிறது (2 கொரி 4:16-17). எனவே நாம் சோர்ந்து போகாமல் பொறுமையோடு ஓடக்கடவோம்.
ஜெபம்:
பரலோக தேவனே, அழிந்து போகின்ற இந்த மண்ணோடு என் ஆத்துமா ஒட்டிக் கொள்ளாதபடிக்கு, நான் அடையவிருக்கும் நித்திய கன மகிமையின் மேன்மையை உணரும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3