புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 26, 2023)

தேவனுக்கு ஏற்ற இருதயம்

சங்கீதம் 51:10

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலை வரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.


ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தன் நண்பர்களோடு சேர்ந்து குடித்து, வெறித்து, உல்லா சமான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். அது ஊராரின் கண்களுக்கு வெளியரங்கமாக இருந்தது. மூத்தவனோ, குறிப்பிட்ட சில நண்பர்க ளோடு சேர்ந்து, தூரத்திலுள்ள ஊருக்கு பயணம் சென்று, பலவி தமாக தகாத இச்சைகளை நிறை வேற்றி, ஊருக்கு திரும்பி, ஊரார் முன்னிலையில் அமைதலான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். தங் கள் இரண்டு குமாரர்களின் நிலை மையை பெற்றோர் நன்றாக அறி ந்திருந்தார்கள். ஆனால், அவர் கள் இளைய குமாரனின் நடக்கையை குறித்தே அதிக கரிசனையுள்ள வர்களாக இருந்தார்கள். ஏன்? மூத்தவனின் குற்றங்களை ஊரார் அறிந்திருக்கவில்லை, அறிந்து கொள்வதற்கு சாத்தியமும் இல்லை. ஆனால், இளையவனின் குறைகளை ஊரார் அறிந்திருந்ததால், தங்கள் குடும்பத்திற்கு அவமானம் என்று எண்ணினார்கள். அதாவது, தங்கள் குமாரர்கள் இரண்டு பேரும் பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வாஞ்சை அவர்கள் மனதில் இல்லை. ஆனால், தங்கள் பிள்ளை களின் குற்றங்கள் தங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், சபை யோர் அறியக்கூடாது என்பதே அவர்களுடைய முதன்மையான பிரச்ச னையாக இருந்தது. தாவீது என்னும் ராஜா, தேவனுக்கு ஏற்ற இருதய முடையவன் என்ற சாட்சியை தேவனிடமிருந்து பெற்றுக் கொண்டான். தாவீது, தன் இளம் பிரயாத்திலிருந்து பெரும் குற்றங்களிலே அகப்பட்டி ருந்தான். தன் குற்றங்களை உணர்ந்த போது, அவன் மனதிலே முதன் மையாக இருந்த காரியம் என்ன? தேவனே, உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும் என்று வேண்டுதல் செய்தான். மற்றவர்க ளுக்கு தன் குற்றத்தை மறைப்பது அவனுடைய நோக்கமாக இருக்க வில்லை. அப்படியானால் நாம் நம் பாவங்களை ஊர் உலகிற்கு அறிவி க்க வேண்டும் என்பது பொருளல்ல. மாறாக, ஒருவேளை நம்முடைய குறை களை ஊர் உலகம் அறிந்திருந்தாலும், அவைகளை மூடி மறைப்பதில் நாட்களை விரயப்படுத்தாமல், தேவனுக்கு முன்பாக நாம் உண்மையு ள்ளவர்களாக இருந்து, அவரோடு ஒப்புரவாகுவதையே முதன்மையாக கொண்டிருக்க வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்விற்கு வேறு பிரித்த தேவனே, என்னை குற்றவாளிகயென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளியென்று நான் தீர்க்காதபடிக்கும் நீர் எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்த ருள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 28:13