தியானம் (ஆவணி 25, 2023)
மறைவான பாவங்கள்
ரோமர் 8:27
இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.
ஒரு சனசமுக நிலையலத்தில் அங்கத்தவராக இருந்த மனிதனானவன், கிராமத்திலே நடந்த களவுவொன்றிலே பிடிபட்டதால், அவனுடைய குற் றத்தை சனசமுக நிலையத்திலிருந்த மற்றய அங்கத்தவர்களுக்கும், கிரா மத்தின் மூப்பர்களுக்கும் அறிவித்தார்கள். இதினிமித்தம் அந்த சனசமுக நிலையத்தின் அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்;டான். பலர் முன்னிலை யிலே அவன் அவமானமடைந்தான். ஆனால், சனசமுகநிலையதின் நிர் வாகத்திலே இருந்த ஐசுவரியமு ள்ள முக்கிய உறுப்பினனொருவன், தன் உழைப்பிலே, சட்டப்படி அர சாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட வரி யை செலுத்தாமல் இருப்பதற்கு பல உபாயங்களை செய்து வந் தான். அதை சிலர் அறிந்திருந்தும், அதை பராமுகமாகவிட்டுவிட்டார்கள். ஒரு சிறிய களவை செய்த கிராமத்து குடியானவன், வெகுவாய் தண்டிக்கப்பட்டான். ஆனால், அரசாங்கத் திற்கு விரோதமாக களவு செய்து கொண்டிருப்பவன், கிராமத்திலே சிற ப்புக் குடிமகனாக வாழ்ந்து வந்தான். இவன் மனிதர்களுக்கு இவை களை மறைத்து வைக்கலாம். ஆனால் இருதயங்களை ஆராய்ந்தறிகி ன்ற தேவனுக்கு மறைபொருளாக காரியம் ஒன்றுமில்லை. ஆண்டவ ராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த போது, இப்படிப்பட்ட சிற ப்பு குடிமக்களாகிய பரிசேயர், வேதபாரகரை கண்டார். 'மாயக்காரரா கிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்க ப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அல ங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினா லும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத் திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.' என்று அவர்களின் உண்மை நிலைமையை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பிரியமானவர்களே, இன்றும் விசுவாசிகள் மத்தியிலே சில குற்றங்கள் யாவருக்கும் வெளியரங்கமாக இருக்கின்றது. ஆனால், மனதிலே மறைந்திருக்கும் பெரிய குற்றங்களும் உண்டு. மறைவான பாவங்களில் வாழ்வோர் தங்களை மற்றவர்களுக்கு நீதிமான்களாக காட்டிக் கொள் ளலாம். ஆனால் தேவன் முன்னிலையில் எவற்றையெல்லாம் யார் மறை த்து வைக்க முடியும். எனவே, மறைவான குற்றங்கள் இருக்குமாயின் அவைகளை அறிக்கை பண்ணி விட்டுவிடுவது நல்லது. கர்த்தரின் நாளிலே கறையற்றவர் களாக அவர் முன்பாக காணப்படுவோமாக.
ஜெபம்:
என் சிந்தையை முன்னந்தவரே, மறைவான பாவங்களை பாரா முகமாக விட்டுவிட்டு, நான் என் வாழ்க்கையை பாவத்திலே வாழா தபடிக்கு உமக்கு பயப்படுகின்ற பயம் என்னுள் எப்போதும் இருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 19:9-13