புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 22, 2023)

பழைய சுபாவங்கள் மாறட்டும்

எபேசியர் 4:22

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்து போட்டு,


ஒரு பண்ணையின் சொந்தக்காரன் பன்றியின் கூட்டத்திலிருந்து ஒரு பன்றியை பிரித்தெடுத்து, அதை சுத்தப்படுத்தி, அது உயிர் வாழ்வதற்கு வேண்டியவைகள் யாவற்றையும் கொடுத்து, சுத்தமான இடத்திலே அதை வைத்து பராமரித்து வந்தான். அவன் எவ்வளவு முயற்சி செய் தாலும், அந்த பன்றி சோர்ந்திருப்பதைக் கண்டு கொண்டான். அதனால், அவன் அதை அதன்பாட்டிற்கு திற ந்து விட்டபோது, அது மற்றய பன்றிகள் இருக்கும் சேற்றிற்கு மிக விரை வாக சென்று அங்கே புரண்டு கொண் டது. அந்தப் பன்றியின் சூழ்நிலைகள் யாவற்றையும் நல்லதாக மாற்றிக் கொடுத்த போதும், அந்த பன்றியின் இயற்கை சுபாவம் மாறாததினாலே, பண்ணை சொந்தக்காரனின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. நித் திய ஜீவனுக்கென்று அழைப்பைப் பெற்ற நாம், பரிசுத்த வாழ்வு வாழு ம்படி வேறு பிரிக்கப்பட்டிருக்கின்றோம். நாம் சமாதானமான வாழ்வு வாழ்வதற்குரிய யாவற்றையும் தேவனாகிய கர்த்தர் நமக்கு கொடு த்திருக்கின்றார். நம்மை சகல சத்தியத்திலும் நடத்தும் ஆவியானவர் நம்மோடிருக்கின்றார். அப்படி யாவும் கொடுக்கப்பட்டிருந்தும், சில விசுவாசிகளின் வாழ்விலே சமாதானம் இல்லை. இரட்சண்யத்தின் சந்தோஷம் இல்லை. அப்படியான சூழ்நிலையிலே, அவர்கள் தங்கள் இருதயத்தின் வாஞ்சைகளை ஆராய்தறிந்து கொள்ள வேண்டும். பரிசுத்தத்திற்குரிய காரியங்கள் யாவும் கொடுக்கப்பட்டிருந்தும், இருதயமானது இன்னொரு காரியத்தை வாஞ்சிக்கின்றதென்றால், ஒருவேளை அவை மாம்சத்தின் இச்சையாக இருக்கும். இது ஒரு பரிதாபமான நிலைமை. பிரியமானவர்களே, நம்முடைய பழைய சுபாவங்கள் யாவும் மாற வேண்டும். அதில் ஏதாகிலும் ஒன்று நம்மிடத்தில் இருக்கும் என்றால், அந்த சுபாவத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வாஞ்சையும் அங்கே உண்டாயிருக்கும் அல்லது சில சூழ்நிலைகளிலே உண்டாகிவிடும். ஏனவே மாம்சத்தின் இச்சைகளை உண்டு பண்ணும் பழைய மனுஷனுக்குரிய சுபாவங்களை உங்களைவிட்டு முற்றாக அகற்றிவிடுங்கள். தெய்வீக சுபாவங்களை வாஞ்சித்து தேடுங்கள். உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியு ள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

ஜெபம்:

புதிய வாழ்வை எனக்கு தந்த தேவனே, பழைய வாழ்விற்குரிய மோசம் போக்கும் இச்சைகளை நான் மறுபடியும் பற்றிக் கொள்ளாதபடிக்கு என்னை நீர் பெலப்படுத்தி உம்முடைய வழியில் நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 3:5