புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 20, 2023)

திறப்பில் நிற்கும் வீரர்கள்

1 தீமோத்தேயு 2:1

எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;


குறித்த நாள் ஒன்றிலே தீடீரென ஏற்பட்ட பெரும் புயல்காற்றினால், நக ரத்தின் அலங்கத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து விட்டது. அதனால் ஏற்பட்ட திறப்பினால் (துவாரம்), நகரத்தின் பாதுகாப்பு பெலவீனப்பட் டது. அந்த திறப்பிலே இரவும் பகலும் காவல் புரியும்படிக்கு நகரத்தின் அதிகாரிகள் தொண்டர்களை முன்வ ரும்படி அழைப்பு விடுத்தார்கள். தங் கள் நகரத்தைக் குறித்து கரிசணை யுள்ளவர்கள், மழையிலும், வெயிலி லும் அந்த திறப்பின் வாசலிலே நின்று நகரத்தை காவல் காத்து வந்தார்கள். ஆனால், அந்த நகரத்தில் வசித்து வந்த சில வீணர்கள், 'இதுவும் ஒரு நகரம், நரி பாய்ந்தால் விழுந்து விடும் அலங்கங்கள், அதை காவல் காப்பவர்களோ மதியீனர்கள்' என்று தொண்டர்கள் சலித்துப் போகும்படி பரியாசம் பண்ணிக் கொண்டே இருந்தார்கள். தொண்டர்களுக்கு ஒத்தாசையாக இருந்து தங்கள் நக ரத்தை காக்க வேண்டியவர்களோ, தெருவிலிருந்து தங்கள் நகரத்தின் நிலைமையயைக் குறித்து பரியாசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேள்விப்பட்ட நகரத்தின் தலைவர், அந்த வீணர்களை பிடித்து, தண்டித்து, சிறையிலே அடைத்து வைக்கும்படி உத்தரவு கொடுத்தார். ஆம், பிரியமானவர்களே, பரலோகத்திலே தேவனுடைய சித்தம் செய்யப்படுவதைப் போல, இந்த பூமியிலும் செய்யப்படும்படிக்கு, திறப்பின் வாசலிலே நின்று ஜெபிக்கும்படிக்கு நாம் அழைப்பை பெற்றிருக்கின்றோம். ஏனெனில், துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகாரலோகாதிபதிகளோடும், வானமண்டலங்களி லுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. இன்று சபைகளிலே, சிலர் அநேக சவால்களின் மத்தியிலே, தங் களை அர்ப்பணித்து, பல தியாகங்களை செய்து, தேவனுடைய ஊழி யத்தை கருத்தோடு செய்து வருகின்றார்கள். ஆனால், வேறு சிலர், திற ப்பின் வாசலிலே நின்று ஜெபிப்பதற்கு பதிலாக, சபையையும், ஊழி யர்களையும், விசுவாசிகளையும் விமர்சிக்கின்றவர்களாக மாறிவிடுகின் றார்கள். தெருவிலே இருந்து காவலாளர்களை பரியாசம் செய்த அந்த வீணர்களைப் போல, இவர்களும், இருளின் அதிகாரத்திற்கு ஆதரவா ளர்களாக மாறிவிடுகின்றார்கள். நீங்களோ, அவ்வண்ணமாக இராமல், திறப்பின் வாசலிலே நின்று ஊக்கமாக ஜெபியுங்கள். பிதாவுக்கு பிரிய மான பிள்ளைகளாயிருங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நான் ஒருபோதும் பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரதபடிக்கும், எப்போதும் உணர்வுள்ளவனாக வாழ்ந்து, குறைகள் நிறைவாகும்படி வேண்டுதல் செய்ய கற்றுத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எசேக்கியேல் 22:30