புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 19, 2023)

பெற்றபணியை நிறைவேற்றுங்கள்

மத்தேயு 25:21

நல்லது, உத்தமமும் உண் மையுமுள்ள ஊழியக்காரனே,


ஒரு எஜமானனானவன் ஊரிலே பாழடைந்த நிலையிலிருந்த பெரிதான மாளிகையை கொள்வனவு செய்து அந்த மாளிகையை புனர்நிர்மாணம் செய்யுபடிக்கு அநேக ஊழியர்களை வேலைக்கமர்த்தினான். ஊழியர்களின் திறமைகளின்படி, பல குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் குறிப்பிட்ட ஒரு பகுதி கொடுக்கப்பட்டிருந்தது. ஓவ்வொரு குழுவையும் மேற்பார்வை செய்வ தற்கு தகுதி வாய்ந்த மேற்பார் வையாளர்கள் நியமிக்கப்பட்டா ர்கள். மேற்பார்வையாளர்களை கண்காணிப்பதற்கு செயற்திட்ட அதிகாரிகள் இருந்தார்கள். இப்ப டியாக யாவும் ஒழுங்காகவும் கிரமமாகவும் அமைக்கப்பட்டு, கட்டு மானபணி ஆரம்பமானது. சில நாட்கள் சென்ற பின்பு, கூரை வேலை செய்ய பணிக்கப்பட்ட ஊழியர்களை சிலர், கூரையிலிருந்து கொண்டு, சுற்று மதில் கட்டும் சில ஊழியர்களின் நோக்கிப் பார்த்துக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் சுற்று மதிலை கட்டுவதில் கவனம் செலுத்தாமல், தோட்டத்தில் வேலை செய்பவர்களில் சிலர் மரங்களின் நிழலில் இளை ப்பாறுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக சிலர் தங்களு க்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்வதில் நோக்கமாக இருக்காமல், மற்றவர்கள் அசதியாய் இருப்பதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த தால், தாங்களும் தங்கள் வேலையில் அசதியாய் இருக்கி ன்றோம் என்பதை மறந்து போனார்கள். கட்டுமானப் பணியின் நிலைப்பாட்டை அறியும்படிக்கு எஜமானனானவன் குறித்த நாளில் ஊழியர்கள் யாவ ரையும் அழைத்திருந்தான். கூரை வேலை செய்யும் ஊழியர்களை அழை த்து அவர்களுக்கு கொடுத்த வேலையை பரிசீலனை செய்து பார்த்தார். அப்போது, சில ஊழியர்கள் தங்களுக்கு கொடுப்பப்பட்ட வேலை யின் பகுதியை குறித்த நாட்களுக்குள் நிறைவேற்றி முடிக்கவில்லை. அதற் கான காரணம் என்ன என்று கூரை வேலை செய்யும் ஊழியர் களை எஜமானனானவன் கேட்டபோது, சில ஊழியர்கள் மறுமொழியாக: மதில் கட்டும் ஊழியர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட முயன்றார்கள். அப் போது எஜமானனானவன் கோபம் கொண்டான். உனக்கு கொடுக்கப்பட்ட வேலையிலே நீ உண்மையாய் இராமல்;, மற்றவனின் குறையை பார்த் துக் கொண்டிருந்தாய் என்று அவனை கடிந்து கொண்டான். பிரியமான வர்களே, தேவனிடத்திலிருந்து பெற்றபணியை நிறைவேற்று வதிலே கண்ணும் கருத்துமாக இருங்கள். நாம் பெற்றவைகளைக் குறித்தே கணக்கு ஒப்புவிக்க வேண்டிய காலம் சீக்கிரமாய் வருகின்றது.

ஜெபம்:

உண்மையுள்ளவனென்று கருதி எனக்கு ஊழியம் தந்த தேவனே, நான் உம்மிடத்தில் பெற்றுக் கொண்டதை முழுமனதோடு நிறைவேற்றி முடிக்க உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 2:15