புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 18, 2023)

பிரயாசத்தின் பலன் எங்கே?

பிரசங்கி 10:1

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்;


அனுதின வேதவாசிப்பும் தியானமும் வாழ்வில் உண்டு. தவறாமல் ஜெபம் செய்தல், உபவாசம், வேதப்படிப்பு, ஜெபக்கூட்டங்கள், ஞாயிறு ஆராதனைகளை ஒன்றையும் தவற விடுவதில்லை. தானதர்மங்கள் தாராளமாக உண்டு. களியாட்டங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. ஆனால், ஏன் மனதிலும், வீட்டிலும், பூரணமான சமாதானம் இல்லை என்று ஒரு மனிதனாவன் தன் வாழ்க்கையை குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள், மிகவும் சுத்தமாக இருக்கும் தன் வீட்டில், துர்நாற்றம் வீசுவதை நுகர்ந்து குழப்பமடைந்தான். சமய லறை, குளியலறை, படுக்கையறை என்று எல்லா அறைகளையும் தேடி ப்பார்த்து ஒன்றையும் காணவி ல்லை. பின்பு, வீட்டின் கூரையின் உட்புறத்தில் ஒரு மூலையில், ஒரு சுண்டெலி செத்திருப்பதை கண்டான். செத்துப்போன சிறிய எலியானது நறுமணம் வீசிக்கொண்டிருந்த அந்த முழு வீட்டையும் நாறப்பண்ணிற்று என்று ஆச்சரியப்பட்டான். அன்று இராத்திரியிலே, தன் குடும்ப வாழ்வை நன்கு ஆராய்ந்து பார்த்தான். பரிசுதத்தத்திற்குரிய பல காரியஙங்கள் வீட்டில் இருந்த போதும், குறிப்பிட்ட பழைய நண்பனைக் குறித்த குறை கூறுதல் அவ்வப்போது நடைபெறுவதை உணர்ந்து கொண்டான். நண்பனாய் இருந்தவன், செய்த துரோகத்தை மறக்க முடியாமல், தன் குடும்பத்தினருடைய இருதயத்தில் மூலையிலே இருக்கும் சிறிய கசப்பானது, தங்கள் வாழ்வில் மனச்சமாதானத்தை கெடுத்துக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டான். அந்த நாளிலிருந்து, உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்க ளைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள் என்று கர்த்தராகிய இயேசு கூறிய வார்த் தையை கடைபிடித்து தன் பழைய நண்பனுக்காக ஜெபம் பண்ணவும், அவனை ஆசீர்வதிக்கவும் ஆரம்பித்தான். நாளடைவிலே, தன் இருத யத்திலிருந்து பெரிதான பாரம் அகன்று போனதை உணர்ந்து கொண் டான். பிரியமானவர்களே, செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்;. புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும். எனவே உங்கள் தியாகங்களும், கடும் பிரயாசங்களும் வீணாய் போகாதபடிக்கு, அசுத்தமானவைகைள முற்றிலும் அகற்றி விடுங்கள்.

ஜெபம்:

நிறைவான வாழ்வை எனக்கு தந்த தேவனே, எந்த ஒரு குறைவையும் நான் என் இருதயத்திலே வைத்திருக்காதபடிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:9