புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 17, 2023)

ஏன் இன்னும் குழப்பம்?

ரோமர் 8:12

ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல


ஒரு மனிதனானவன் தன் குடும்பத்தோடு ஒரு பழைய வீட்டில் வாழ்ந்து வந்தான். அந்த வீட்டின் பல பாகங்கள் பாழடைந்துபோயிற்று என்று கூறினாலும் மிகையாகாது. மழை நாட்களிலே,சுவர்களிலிருந்த வெடிப்பு வழியாக தண்ணீர் கசிந்து, வீட்டிற்குள் வருவதால், வீட்டின் படுக்கையறை அழுக்கு நிறைந்ததாகவும், உபயோகமற்றதாகவும் காண ப்பட்டது. ஆண்டுகள் கடந்து சென்ற பின்னர், வீட்டின் பொருளாதார நிலை மைகள் மேம்பட்டது. அந்த மனித னானவன், அந்த வீட்டை புனர்நிர் மாணம் செய்தான். அந்த வீடு ஒரு அழகான புதிய வீட்டைப் போல மாறி யது. பார்வைக்கு அழகானதாக வும், உபயோத்திற்கு உகந்ததாகவும் காட் சியளித்தது. ஆனாலும், ஒரு சுவரின் வெடிப்பை சரியான முறையில் திருத்தம் செய்யாதால், மழை நாட்களிலே தண்ணீர் கசிந்து உள்ளே வந்தது. அழகாய் காட்சியளிக்கும் அந்த வீடு மழை நாட்களிலே பாவ னைக்கு உகந்ததாக இருக்கவில்லை. அந்த வீட்டின் நிலைமை சிந்தை யில் வைத்தவர்களாய், நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த உலகத்தின் அளவுகோலின்படி நாம் உயர்ந்தவர்களாகவோ, தாழ்ந்தவர்களாகவோ அல்லது கற்றவர்களாகவோ, கல்லாதவர்களாகவோ இருக்கலாம். ஆனால், ஆண்டவர் இயேசுதாமே பராபட்மில்லாமல் யாவருக்கும் தம்முடைய சமாதான த்தை கொடுத்திருக்கின்றார். ஆண்டவர் இயேசுவை அறிய முன்பு பாழ டைந்த நிலைமையிலிருந்த வாழ்வு மாற்றப்பட்டது. பல ஆசீர்வாத ங்களை பெற்றுக் கொண்டார்கள். வாழ்க்கை வளமாக தோன்றுகின்ற போதிலும், நாளடைவிலே சமாதானமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள். அதற்கு காரணம் என்ன? அந்த வீட்டின் சுவரிலிருந்த வெடிப்பானது சரியான முறையில் திருத்தப்படாதது போல, இப்ப டிப்பட்ட மனிதர்களுடைய வாழ்விலுள்ள சில மாம்சத்தின் பழக்கங்கள் தங்கள் வாழ்வில் வருதற்கான வழிகளை முற்றாக அடைத்து விடாமல், பராமுகமாக விட்டுவைக்கின்றார்கள். வாழ்வு வளமானதாக காட்சியளித் தாலும், மாம்சத்தின் இச்சைகள் வாழ்வில் நுழைந்து சமாதானமான வாழ்வை கெடுத்துவிடுகின்றது. பிரியமான வர்களே, உங்கள் வாழ்க்கை ஆராய்ந்து பாருங்கள். சமாதானத்தை கெடுக்கின்ற காரியங்களை உண்டு பண்ணும் மாம்சத்தின் கிரியைகளை அடைத்துக் போடுங்டகள்.

ஜெபம்:

அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியை தந்த தேவனே, மாம்சத்தின் கிரியைகளுக்கு நான் மறுபடியும் அடிடைப்படாதபடிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏரேமியா 2:13