புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 16, 2023)

கற்றறிந்தவைகளில் நிலைத்திரு

2 தீமோத்தேயு 3:14

நீ கற்று நிச்சயித்துக்கொண்ட வைகளில் நிலைத்திரு


ஒரு விசுவாசியானவன், தன் வாலிப நாட்களிலிருந்து பாடசாலையிலே கற்று வந்த பழைய நண்பர்கள் மத்தியிலே பேச்சிலும், நடக்கையிலும், நன்மதிப்பையும், நற்சாட்சியையும் பெற்றிருந்தான். பல ஆண்டுகள் சென் றபின்பு, பழைய நண்பர்களில் சிலர், தங்கள் வருடாந்த ஒன்று கூடலில் பங்குபெற்றுமாறு, அழைத்;தார் கள். நீ ஒன்றும் செய்ய வேண் டியதில்லை, நீ எங்களோடு இணை ந்து கொண்டாலே எங்களுக்கு போதும் என்று குறித்த ஒரு வரு டத்திலே, அவனை வருந்தி அழைத்ததால், விசுவாசியா னவன் இர ண்டு மனமுடையவனாக அவர்களுடைய ஒன்றுகூடலிலே பங்கு பற்று ம்படி சென்றிருந்தான். வைபவம் வழமைபோல நல்ல விசேஷ விருந்தி னருடைய உரைகளோடு ஆரம்பித்தது. சற்று நேரத்திற்கு பின்னர், நெறி யற்ற ஆடல் பாடல்களோடு கொண்டாட்டங்கள் ஆரம்பித்தது. விருந்திரு னர்கள் குடித்து, வெறித்து, களியாட்டங்களிலே ஈடுபடடார்கள். அங்கிரு ந்த பலருடைய நடை உடை பாவனைகள் யாவும் சாதாரண குடும்ப வாழ்விற்கே தகுதியற்றதாக காணப்பட்டது. இவைகளை கண்ட அந்த விசுவாசியானவன், தான் நிலையைவிட்டு தவறிவிட்டதை உணர்ந்து மனம் வருந்தினான். மறுநாளிலே, நடந்த சம்ப வத்தை தன் போதகரிடம் கூறினான். மனிதர்கள் இப்படியான களியா ட்டங்களிலே ஈடுபடுகின்றா ர்களே என்று ஆச்சரியப்பட்டான். போத கரானவர் அவனை நோக்கி: மகனே, அவர்கள் தாங்கள் அறிந்த விடய ங்களை மிகவும் சிறப்பாக தங்கள் முழு பெலத்தோடும், முழுமனதோடும் செய்து வருகின் றார் கள். ஆனால், நீயோ, நீ அறிந்தவை களி லிருந்து தவறிப் போனாய். அவர்கள் உன்னை அநேகம்தரம் தங்கள் ஒன்றுகூடலுக்கு வரும்படி, சலிப்படையாமல் வருந்தி அழைத்தார்கள் என்று கூறினாய். நீ அவர்க ளை எங்களுடைய விசேஷpத்த விடுதலை கூட்டங்களுக்கு அவர்களை எப்போதாவது அழைத்ததுண்டா? சற்று சிந்தித்துப்பார். இது உன் வாழ் வின் முடிவு அல்ல. ஆனால், நீ கற்றுக் கொண்ட ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும். கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்து க்களை நீ நன்கு அறிந்தவன். நீ கற்று நிச்சயத்தவைகளில் நிலைத்திரு. அவைகளால் நீ அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு, தீமை செய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்க ளுக்கும், மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக் கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய் என்று அறிவுரை கூறினார்.

ஜெபம்:

நியாயத்தின் நெறிகளைத் தற்காத்துஇ தம்முடைய பரிசுத்தவான் களின் பாதையைக் காப்பாற்றுகின்ற தேவனேஇ இனி ஒருபோதும் நான் நிலை தவறிப்போய்விடாதபடிக்கு என்னை காத்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 10:27-28