புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 15, 2023)

இளைத்துப் போய்விடாதிருங்கள்

1 பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்;


பட்டணத்தின் மதிலை காக்கும்படிக்கு காவற்கோபுரத்திலிருந்த காவற் காரன், பல ஆண்டுகளாக தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இரு ந்து ராஜ சேவை புரிந்து வந்தான். குறித்த ஒரு இராத்திரியிலே அவன் மிகவும் களைப்படைந்திருந்தான். அந்த வேளையிலே 'சுமார் 20 ஆண்டுகளாக நான் இந்த கோட்டையை காவல் காத்து வருகின்றேன். இன்றுவரைக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இந்த நடு ஜாமத்திலே யார்தான் வரப்போகின்றார்கள். சற்று இளைப்பாறு வோம்' என்று கூறி கண்ணயர்ந்து போனான். பல ஆண்டுகளாக கண்ணயராமல் அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த எதிரியின் ஒற்றர்கள் அன்றிரவு, அந்தக் காவற்கோபுரத்தின் பக்கமாக பட்டணத்திற்குள் புகுந்து விட்டார்கள்;. இவ்வண்ணமாகவே, சிலருடைய ஆவிக்குரிய வாழ்வும் மாறிப் போய்விடுகின்றது. ஆதியிலே மிகவும் நன்றாக ஓடியவர்கள் பாதியிலே நின்று சற்று தூங்குகின்றவர்களாக மாறிவிடுகின்றார்கள். தேவனை அறிந்து முப்பது வருடங்களாகிவிட்டது. இந்த உலகிலே என்னத்தை அனுபவித்தோம்? இரவும் பகலுமாக தேவ ஊழியத்திற்கு உதவியாக இருந்தோம். பல பாடுகளை அனுபவித்தோம். சற்று ஓய்வெடுத்தால் என்ன என்று எண்ணங் கொண்டு, தாங்கள் உறுதியாய் நிலைத்திருந்த காரியங்களை விட்டுவிடுகின்றார்கள். கள்வன் வீட்டிற்குள் நுழையாதபடிக்கு அடை த்துக் காக்கப்பட்ட சிறு ஜன்னல்களை திறந்து விடும் மதியீனர்கள் போல, தங்களை சுற்றியிருந்த பாதுகாப்பின் வேலியின் சில பகுதி களை உடைத்து விடுகின்றார்கள். ஆனால், எதிரியாவன் கெச்சிக்கின்ற சிங்கம் போல யாரை விழுங்கலாம் என்று சுற்றித்திரிவதை மறந்து போய்விடுகின்றார்கள். தாங்கள் தேவ காரியங்களை விட்டு ஓய்வெடு த்தாலும், எதிரி ஓயாமல் சுற்றித்திரிகின்றான் என்பதை உணராமல் நட ந்து கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளிய hகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை எப்போதும் தரித்தவர்களாய், எந்தச் சமயத்திலும் சகல விதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவா ன்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். ஆவியானவர்தாமே உங்களை பெலப்படுத்துவாராக.

ஜெபம்:

சோர்ந்து போகும் வேளையிலே பெலன் தந்து நடத்தும் தேவனே, ஒருபோதும் நான் பின்வாங்கிப் போகாதபடிக்கு இளைத்துப் போன என் ஆத்துமாவை நீர் உயிர்ப்பித்து பெலன் தந்து நடத்திச் செல்வீராக. இரட்ச கர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 16:13