புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 14, 2023)

ஆரோக்கியமான வாழ்வு

ரோமர் 12:11

அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்


ஒரு மனிதனானவன் தன் இளமை காலத்திலிருந்து அனதின உடற் பயிற்சி செய்வதில் ஒரு போதும் தவறிப் போவதில்லை. அத்துடன் கிழ மைக்கு மூன்று முறை உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று, பயிற்றுநர் கற்பித்துக் கொடுப்பதை முறைப்படி பயிற்சி செய்து வந்தான். உடல் அசதியாக இருக்கும் நாட்களில் அந்த அசதியை மேற்கொள்ளும்படி எப்படியாவது பயிற்சி செய்ய வேண்டும் என்று காலையிலே எழுந்திரு ப்பான். விடுமுறைநாட்களிலும், நாடுவிட்டு நாடு சென்றாலும், அவன் உடற்பயிற்சி செய்வதை விட்டுவிடுவதில்லை. ஏனெனில் அதனால் அவனுக்கு உண்டாகும் நன்மைகளை அவன் நன்றாக அறிந்திருந்தான். உடற்பயிற்சி அவன் வாழ்வின் ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாததாக இருந்தது. அவனுடைய ஒழுக்கத்தை பலரும் பாராட்டினார்கள். பாருங் கள் ஒரு நாள் அழிந்து போகும் சரீரத்தை அவன் மிகவும் கவனத் துடன் பேணி பாதுகாத்து வந்தான். அழியாத நித்திய வாழ்விற்காக அழைப்பை பெற்ற நாம், நம்முடைய ஆத்துமாவை குறித்து இன்னும திகமாக கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். வேத வாசிப்பும், ஜெபமும், சபை கூடிவருதலும் நாம் விரும்பினால் செய்யலாம் அல்லா விடில் விட்டுவிடலாம் என்று நாம் வாழக்கூடாது. உயர்வான சூழ்நிலை களிலும், தாழ்வான நாட்களிலும் நாம் அனுதினம் வேதத்தை வாசித்து தியானிப்பதையும், ஊக்கமாக ஜெபம் செய்வதையும் விட்டுவிட்டால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வு ஆரோக்கியமுள்தாக இருக்காது. வீட் டில் கொண்டாட்டங்கள் நடந்தாலும், ஒரு வேளை துன்பத்தின் பாதை யிலே நடந்தாலும், அந்நாட்களை நாம் கடப்பதற்கும், நம்மை நோக்கி வரும் சூழ்நிலைகளை மேற்கொள்வதற்கும் தேவனுடைய வார்த்தைக ளும், அவருடைய வழிநடத்துதலும் இன்றியமையாதது. அது மட்டுமல் லாமல், நாம் வாரந்தோறும் சபையாக கூடி தேவனை ஆராதித்து, தேவ செய்தியை கேட்டு, வேதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். உடல் அசதியான நாட்களில் தவறாமல் உடற்பயிற்சி செய்த அந்த மனிதனைப் போல, நாம் சோர்வான நாட்களிலே தேவ சமுத்தை இன்னும் அதிக மாக நாட வேண்டும். ஆண்டவர் இயேசுவோடு நடக்காத நாட்கள் வீணான நாட்களாய் போய்விடும். எனவே கர்த்தரை சேவிப் பதிலிருந்து விடுமுறை எடுத்து விடாதிருங்கள். எங்கு சென்றால் வேத த்தை தியா னித்து, ஜெபித்து, சபைக்கு சென்று தேவனை ஆராதிப்பதை விட்டுவி டாதிருங்கள்.

ஜெபம்:

அழியாத நித்திய ராஜ்யத்திற்காக என்னை அழைத்து தேவனே, என் வாழ்வின் நோக்கத்தை நான் மறந்து போய்விடாமல் எப்போதும் விழிப்புள்ளவனாக வாழ உணர்வுள்ள இருதத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6