புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 13, 2023)

யாவும் கடந்து போகும்

சங்கீதம் 37:7

கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு


ஒரு மனிதனானவன் தன் பாடசாலையில் கல்வி கற்கும் நாட்களிலே ஏற்பட்ட சில பிரச்சனைகளை குறித்து சற்று சிந்தித்துப் பார்த்தான். குறி ப்பாக சில ஆண்டுகளிலே கல்வி கற்கும் போது, சில மாணவர்களோடு ஏற்பட்ட தகறாறுகள் மற்றும் சில ஆசிரியர்களின் கண்டிப்பினால், பாட சாலையைவிட்டு விலகிப் போய்விட்டால் நல்லது என்று தோன்றிய நாட் கள் இருந்தது. அவ்வேளை களிலே, அவன் தன் பெற் றோர் கூறிய அறிவுரையின் படி நடந்து கொண்டான். எல் லா பாடசாலைகளிலும் நூற் றுக் கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். அநேக ஆசிரியர்களும் நிர்வாகிகளும் கற்றுக் கொடுக்கின்றார்கள். பலர் ஒன்றுகூடும் இடத்திலே பிரச்சனைகள், கரு த்து முரண்பாடுகள் இல்லாமற் போகாது. இருக்கும் இடத்தில் சில முர ண்பாடுகள் ஏற்படலாம். இன்னுமொரு இடத்தில் வேறு சில பிரச்சனை கள் உண்டாகலாம். எனவே முரண்பாடுகளையும், பிரச்சனைகளையும் கண்டு விலகி ஓடாமல், அவைகளை தீர்க்கும் வழிகளையும் கற்றுக் கொண்டு, இனி அவைகள் ஏற்படாதபடிக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். சில வேளைகளிலே உபத்திரவங்களை சகித்துக் கொண்டு பொறுமையாக இருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த பூமி நிர தரமற்றது. நம் வாழ்க்கையும், அந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை களும் அவ்வண்ணமாகவே இருக்கின்றது. அவை யாவும் கடந்து போகும் என்று அவனுடைய பெற்றோர் அவனுக்கு ஞாபகமூட்டிய துமுண்டு. பிரியமான சகோதர சகோதரிகளே, மேற்கூறிய சம்பவத்தை மையமாக வைத்து, உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை ஆரா ய்ந்து பாருங்கள். இன்று மனிதர்கள் பிரச்சனைகளைவிட்டு ஓடிச் செல் வதையே முதல் தீர்மானமாக எண்ணிக் கொள்கின்றார்கள். பாடசாலை, வேலை இடங்கள், சபை ஐக்கியம், உறவுகள், குடும்பங்கள், நட்புக் களை சீக்கிரமாக உடைத்துக் கொள்கின்றார்கள். நீடிய பொறுமை, மன்னிப்பு, மனந்திரும்புதல், மனம் வருந்துதல், இரக்கம் பாராட்டுதல், ஒப்புரவாகுதல் போன்ற தேவ வார்த்தைகள் தங்கள் வாழ்வில் நிறைவேற இடங் கொடுப்பதில்லை. பிரச்சனைகள் சூழ்ந்து கொள்ளும் போது, முதலாவதாக, தேவனுடைய பாதத்திலே அமர்ந்திருக்க கற்றுக் கொள்ளுங்கள். கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான் எனவே பொறுமையுள்ளவர்களாக இருங்கள். உங்கள் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருங்கள். அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, பிரச்சனைகளை கண்டு பதறிப் போகாமல், உம்முடைய பாதத்திலே அமர்ந்திருந்து, உம்முடைய வார்த் தையின் வழியிலே நடக்கும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 19:2-3