புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 11, 2023)

போகும் வழியை ஆராய்தறியுங்கள்

யோனா 2:7

என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்;


யோனா என்னும் ஒரு மனிதனானவன் பிரயாணப்பட்டிருந்தான். அவன் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக இருந்ததினால், கர்த்தருடைய வார்த்தை இன்னதென்பதை நன்றாக அறிந்திருந்தான். கர்த்தர் போகும்படி கூறிய இடத்திற்கு பிரயாணப்பட்டு போகாமல், கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக எதிரான திசையிலே கப்பலேறி பிரயாணப்பட்டிருந்தான். அதனால், அவன் தனக்கும் தன்னனோடு கப்பலிலே இருந்த பயணிக ளுக்கும் பெரிதான ஆபத்தை உண்டு பண்ணினான். கர்த்தர் அவன்மேல் கிருபையுள்ளவராக இருந்தபடியால், உபத்திரவங்கள் வழியாக தேவ சித்தம் இன்னதெ ன்பதையும், அதை எப்படி நிறை வேற்றுவதென்பதையும் யோனா விற்கு கற்றுக் கொடுத்தார். தேவனாகிய கர்த்தர் பேசும் போது, தேவ னுடைய பிள்ளைகள் அவருடைய வார்த்தைகளை கேட்டு அதற்கு கீழ்ப டிந்து நடக்கும் போது அவர்களுடைய வாழ்விலே நன்மையுண்டாகி ன்றது. ஆனால், தேவ வார்த்தைகளை கேட்டும், அதற்கு கீழ்படி யாமல், தேவன் கொடுத்த சுத்த மனசாட்சிக்கு விரோதமாக தங்கள் வாழ்க்கையிலே கிரியைகளை நடப்பிக்கி ன்றவர்கள், தங்களுக்கும் தங்களை சூழ இருக்கின்றவர்களுக்கும் உபத் திரவங்களை உண்டு பண்ணிக் கொள்கின்றார்கள். ஒரு பிள்ளையானவன், சொல் கேட்காமல் தொடர்ந்தும் தவறான வழியிலே நடக்கும் போது, அவனை நேசிக்கின்ற அவனுடைய தகப்பனானவர் அவன் தவறுகளை அவனுக்கு உணர்த் தாதிருப்பாரோ? அவன் தவறுகளை உணராமல் இரு க்கும் போது அவனை கண்டியாமல் விட்டுவிடுவாரோ? தன் புத்திரைன நேசிக்கின்ற தகப்பனானவர் அவனை சிட்சிக்கின்றார். கீழ்படியாமை யானது பிள்ளை களுடைய வாழ்க்கையிலே வரும் போது, சிட்சையா னது இன்றியமை யாததாக இருக்கின்றது. எனவே, நம் ஆத்துமா நம்மில் தொய்ந்து போகையில், நாம் நம் வழிகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவனுக்கு விரோதமான எந்த மனித எண்ணங்களையும் நாம் நம்மில் நிலைகொள்ளவிடாமல், கர்த்தர் கற்பித்த வழியிலே வாழ நாம் நம்மை முற்றிலும் ஒப்புக் கொடுக்க வேண்டும். தேவனுடைய தீர்க்கதரிசியாகிய யோனா, மீனின் வயிற்றிலிருந்து, தன் நிலைமையை உணர்ந்து, அறிக் கையிட்டு கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அப் பொழுது அவனுடைய விண்ணப்பம் கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்திலே வந்து எட்டியது.

ஜெபம்:

உன்னதமான தேவனே, பொய்யான மாயையைப் பற்றிக்கொண்டு எனக்கு வரும் கிருபையைப் போக்கடிக்காமல், உம்முடைய சித்தத்தின்படி செய்ய உணர்வுள்ள இருதத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 10:4-6