புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 10, 2023)

தேவ சித்தத்திற்கு இடங்கொடுப்போம்

அப்போஸ்தலர் 21:14

கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்


ஒரு சமயம், தேவனுடைய ஊழியராகிய பவுல் எருசலேமிற்கு திரும்பிய போது, சிலர் அவனுக்கு விரோதமாக எழுந்து அவனை அடித்து அவனை கொன்று போடும்படி எண்ணமுள்ளவர்களாக இருந்தார்கள்.; நித்திய ஜீவனை அடையும் நற்செய்தியை அவன் அறிவித்ததாலேயே, யூத மார்க்கத்தர் அவன்மேல் கோபம் கொண்டு, பட்டணம் முழுவதும் பெரும் கலகத்தை ஏற்படுத்தினார் என்று பரிசுத்த வேதாகமத்திலே காணலாம். ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பது தேவ னுடைய சித்தமாக இருக்கின்றது. அந்த சித்தமானது மனிதர்களு டைய வாழ்க்கையிலே நிறைவே றாதபடிக்கு இருளின் அதிகாரமா னது, நற்செய்தியை அறிவிக்கின் றவர்களுக்கு எதிராக கொண்டிக்கி ன்றது. எனவே நற்செய்தியின் நிமித்தம் உண்டான உபத்திரவங்களை கண்டு, பயந்து சோர்ந்து போகாமல், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும்படி மிகவும் உறுதியாக இருந்த பவுலைப் போல நாமும் கர்த்தருடைய கரத்தின் கருவிகளாக, பெற்ற பணியை நிறைவேற்றி முடிக்கும்படி செயற்பட வேண்டும். அன்று இராத்திரியிலே பவுல் சிறையிலே போடப்பட்டிருக்கையில், கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடு த்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். பவுல், ரோமாபுரிக்கு பிரயாணம் செல்வது தேவனுடைய சித்தமாக இருந்தது. தேவ ஊழியராகிய பவுல், அந்த பிரயாணத்தை மேற்கொண்ட போது, இன்னும் பல தடைகளும், உபத்திரவங்களும் ஏற்பட்டது. ஆனால், பவுலோ, கர்த்தரால் அவனுக்குண்டான வார்த்தையில் உறுதியாய் நிலைத்திருந்தான். நாமும் தேவ சித்தத்தை நிறைவேற்ற நம்மை ஒப்புக் கொடுக்கும் போது, வாழ்க்கையிலே உபத்திரவங்களும் தடைகளும் உண்டாகலாம். அவைகளை கண்டு நாம் சோர்ந்து போய்விடக்கூடாது. கர்த்தர் போ என்றால் நாம் போவதற்கும், அவர் திரும்பு என்றால் நாம் திரும்புவதற்கும் ஆயதமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆம், பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தருடைய சித்தத்தை நம் வாழ் வில் நிறைவேற்றி முடிக்காதபடி அந்தகார கிரியைகளை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே, சூழ்நிலைகளை கண்டு பின்னிட்டுத் திரும்பாமல், தேவ சித்தம் நிறைவேறும்படி கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்படுவோமாக.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, உம்முடைய சித்தத்தை நிறைவேற்றும் பாதையில் ஏற்படும் உபத்திரவங்களையும் சவால்களை கண்டு சோர்ந்து போகாமல் முன்னேற எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:10-13