புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 09, 2023)

விசுவாசத்தின் பரீட்சை

யாக்கோபு 1:3

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனாவன், தன் குடும்பத்திலே சில முக்கிய அலுவல்களை செய்து முடிக்கும்படி வெளியூருக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. அவன் முன்னெடுக்கும் பிரயாணங்கள் வாய்க்கும்படி தேவனை வேண்டிக் கொள்வது அவனுக்கு வழக்கமாக இருந்தது. அவ்வண்ணமாகவே இந்த தடவையும் அவன் வேண்டுதல் செய்து கொண்டு, குறித்த நாளிலே தன் பிரயாணத்தை ஆரம்பித்தான். பிரயாணத்தை ஆரம்பித்த நாளி லிலே, மனக் குழப்பம் ஏற்படும்ப டியாய் பல தடைகள் ஏற்பட்டிருந் தது. அவனுக்கு மட்டுமல்ல, அவ னோடு பிரயாணம் சென்ற யாவரு க்கு அந்தத் தடை ஏற்பட்டிருந்தது. ஆனாலும், அவன் நான் என் தேவ னாகிய கர்த்தரிடம் வேண்டுதல் செய்தேன். அவர் என் சத்தத்தை கேட்கின்ற தேவன் என்றபடியால் அவன் குழப்பமடையாமல் பொறுமையுள்ளவனாக இருந்தான். கர்த்தர் அவனுடைய பிரயாணத்தை வாய்கப் பண்ணினார். அவன் செய்து முடி க்க வேணடும் என்று திட்டமிட்டிருந்து காரியங்கள் யாவற்றையும்; சிற ப்பாக செய்து முடிக்கும்படி கர்த்தர் வழியை உண்டு பண்ணினார். அவர் எதிர்பாராத நன்மைகளை அவனுக்கு அருளினார். என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசு வாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறை வுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக் கும் படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது என்று பரிசு த்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். எனவே, நீங்கள் ஒரு காரிய த்தை தேவனிடம் கேட்டிருந்தால், அவருடைய சித்தப்படி கேளுங்கள். உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை குறித்து, விண்ணப்பித்திருந்தால், தேவனாகிய கர்த்தரிடத்திலே விசுவா சமாயிருங்கள். உண்மையாக நீங்கள் தேவனை விசுவாசித்தால், அவர் காரியத்தை வாய்க்ப்பண்ணுவார் என்ற மனஉறுதியோடு பொறுமை யாக இருங்கள். நீங்கள் நினைத்த பிரகாரம் காரியங்களை நடைபெற வேண் டும் என்று எண்ணாமல், நாம் நினைப்பதற்கும் வேண்டிக் கொள் வதற் கும் மிக அதிகமாக செய்யும் கர்த்தரை நோக்கி காத்திருங்கள். அவர் காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, எதிரிடையான சூழ்நிலையிலே நான் மனம் தளர்ந்து போகாமல் விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருக்கு ம்படி எனக்கு பொறுமையை கற்றுத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 5:2-4