புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 08, 2023)

ஆறுதல் தரும் பிள்ளைகள்

2 கொரிந்தியர் 5:9

அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.


மழை காலம் ஆரம்பித்தபோது மண்வீட்டின் கூரையில் வேயப்பட்ட சில ஓலைக் கிடுகுகள் வழியாக தண்ணீர் வீட்டிற்குள் சொட்டுச் சொட்டாக ஒழுகியதை வீட்டிலிருந்த யாவரும் கண்டார்கள். பிள்ளைகளில் இளை யவன் தகப்பனானவரை நோக்கி: நாங்கள் எப்படி மழை காலத்தை கடக்கப் போகின்றோம்? இதை ஏன் திருத்தவில்லை? எப்படி இங்கே வாழ்வது என்று மனக்கசப்போடு முறையிட்டுக் கொண்டான். பிள் ளைகளில் மூத்தவன், சமையலறை க்குள் ஓடிச் சென்று, ஒரு சட்டியை எடுத்து, தண்ணீர் ஒழுகும் இடத்தில் வைத்து விட்டு, தன் தகப்பனான வரை நோக்கி: அப்பா, நாளை காலை யிலே, சில பச்சைக் கிடுகுகளை செய்து, தற்காலிகமாக ஒழுக்குள்ள இடத்தை அடைத்துக் கொள்வோம் என்று கூறினான். எளிமையான வாழ் க்கை வாழும் பெற்றோர், மூத்தவனுடைய வார்த்தைகளை கேட்ட போது மகிழ்ச்சியடைந்தார்கள். தங்களுடைய இளைய குமாரனும், தங்கள் மூத்தவனைப் போலவே வளர வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களாக இருந்தார்கள். அப் படியாகவே, நம்முடைய பரம பிதாவும், நாம் அவருடைய திருக்குமார னாகிய இயேசுவைப் போல மாற வேண்டும் என்பதையே விரு ம்புகின்றார். இன்று சிலர், குறைகளை சுட்டிக் காட்டி அதனால் உண் டாகும் விளைவுகளைக் கூறுவதில் பெருமிதம் அடைகின்றார்கள். தங் கள் சொந்த குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டியவர் கள், குடும்பத்திற்கு வேதனை உண்டாக்குகின்றவர்களாக மாறிவிடுகி ன்றார்கள். நாம் நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண் டும். விசேஷமாக தேவனுடைய ஊழியங்களிலே நாம் குறைகளை நிறை வாக்கும் மனநிலையுடையவர்களாக மாற வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்திலே, மூத்தவன் பெரிதான காரியங்களை செய் யவில்லை. ஆனால், தங்களிடம் இருக்கும் வளங்களை கொண்டு, குறை களை நிவர்த்தியாக்க வேண்டும் என்ற மனநிலையுடையவனாக இருந்து வந்தான். நிறைவிலும் குறைவிலும் ஆறுதல் தரும் மகனாக வாழ்ந்து வந்தான். நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும், நம்முடைய மாம்சத்தின் எண்ணங்களை நிறைவேற்றாமல், எப்போதும், எந்த சூழ்நிலையிலும் மெய்யான நீதியிலும் பரிசுத்த்திலும் தேவனுக்கு பிரியமுள்ள பிள்ளைகளாக வாழு ம்படி நாட வேண்டும். தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருப்பதால், குறைவு எனக்கு இல்லை என்று அறிக்கையிடுவதிலே உறுதியாய் தரித்திருக்ககடவோமாக.

ஜெபம்:

அன்பின் பிதாவாகிய என் தேவனே, எக்காலத்திலும்இ உம்மு டைய திருக்குமாரனின் சாயலிலே நான் அனுதினமும் பெருகும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 3 யோவான் 1:4