புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 07, 2023)

குறைகளின் நீண்ட பட்டியல்

எபேசியர் 4:23

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,


ஒரு கம்பனியிலே புதிதாக சேர்ந்த மனேஜரொருவர், தன் பிரிலுள்ள வேலைகளை ஆராய்ந்து பார்த்து, அங்குள்ள குறைகளை பட்டியல் படுத்தினார். அந்தப் நீண்ட பட்டியலை எடுத்துக் கொண்டு, கம்பனியின் இயக்குனரை சந்திக்கும்படி சென்றிருந்தார். அந்தப் பட்டியலை இயக் குனர் பார்த்த பின்னர், அந்த மனேஜரை நோக்கி: நல்லது, நீ இந்தப் பிரிவிலுள்ள குறைகளை பட்டியல் படுத்துவதற்கு அதிக நாட்களை செலவு செய்திருக்கின்றாய். இப் போது, அவைகளை நிவர்த்தி செய் யும் படிக்கான வழிமுறைகளை ஏற் படுத்து. குறைகளை நிவிர்த்தி செய்து, இந்த கம்பனியின் சொந்தக்காரரு க்கு நல்ல ஆதாயம் வரும்படி வியா பாரத்தை முன்னெடுத்து செல்வதற்காகவே நானும் நீயும் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றோம் என்று கூறினார். ஆம் பிரியமானவர்களே, நாம் நம்முடைய வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். வாழ்வின் குறைகளை பாராமுகமாக விட்டுவிட முடியாது. அதே வேளை யிலே குறைகளை பார்ப்பதோடு நின்றவிடாமல், அவைகளை நிறைவா க்கும் வழிகளை நாம் நாடித் தேட வேண்டும். பொதுவாக மனிதர்கள் தங்கள் சொந்த வாழ்வில், அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் குறை களை பாராமல், மற்றவர்களுடைய குறைகளைபற்றி பேசுவதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றார்கள். ஒருவன் தன் வீட்டிலுள்ள குறை களை கண்டு கொள்ளாமல், நாட்டின் தலைவருடைய குறைகளை பேசிக் கொண்டிருந்தான். அவன் தன் வீட்டின் தலைவானாக இருந்த போதும், வீட்டிலே தன்னுடைய முழுக் கட்டுப்பாட்;டிலிருக்கும் குறை களை நிவர்த்தி செய்ய மனதற்றவனாக இருந்தான். நாம் அப்படியி ருக்கலாகாது, என்னுடைய கண்களிலே பெரிதான மரக்குத்தியை வைத்துக் கொண்டு, நான் மற்றவன் கண்ணைப் பார்ப்பது நியாயமல்ல. முத லாவதாக, என்னுடைய கண்கள் தெளிவாக பார்க்கும்படி நான் என்னு டைய கண்களை சுத்தம் செய்ய வேண்டும். அந்தப்படி, முந்தின நடக் கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனு டைய சாயலாக சிருஷ;டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளு ங்கள். குறைகளை நிறைவாக்கும் தேவன் நம்மோடிருக்கின்றார். பெலவீனங்களிலே பெலனாய் வரும் தேவன் நம்மோடிருக்கின்றார். எனவே, நிறைவை நோக்கி முன்னேறுங்கள்.

ஜெபம்:

கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே என் குறைகளை நிறை வாக்கும் தேவனேஇ குறைகளை பேசிஇ மன குழப்பத்தோடு வாழாமல்இ நிறைவை நாடும் வாழ்க்கை வாழ உணர்வுள்ள இருத யத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:19