புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 06, 2023)

குறையற்ற ஒரு வருஷம்

பிலிப்பியர் 2:16

எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.


நீ பாடசாலை நாட்களிலே, எந்தக் குறையுமின்றி கடந்து சென்ற பூரணமான ஒரு வருஷம் ஒன்று உண்டா? நீ வேலை செய்யும் நாட்களிலே, குறை கூறாமல் கடந்து சென்ற ஏதாவது ஒரு வருஷத்தை உன்னால் குறிப்பிட முடியுமா? நீ வீட்டிலே முறுமுறுக்காமல இருந்த வருஷம் ஒன்றை குறிப்பிட்டு கூற முடியுமா? நீ சபையிலே குழப்பமில்லாமல் கட ந்து சென்ற ஒரு வருஷம் உண்டா? பிரச்சனைகள், உபத்திரவங்கள், கலகங்கள், குழப்பங்கள், முறையீடுகள், தப்பாக விளங்கிக் கொள்ளுதல், வாக் குவாதங்கள், பிரிவினைகள் என்று எதிர்மறையான வார்த்தைகளே மனி தர்களுடைய வாழ்க்கையிலே அவர் களுடைய வாயிலிருந்து பிறக்கின்றன. பொதுவாக அவை தங்களை குறித்ததல்ல மாறாக மற்றவர்களை குறித்ததாகவே இருக்கின்றது. பாடசாலையிலே ஆசிரியர்கள், அதிபரை குறித்த குறைகள். வேலையிலே அதிகாரிகளைக் குறித்த முறையீடுகள். சபையிலே மேய்ப்பர்கள், மூப்ப ர்கள், விசுவாசிகளைக் குறித்த குறைகள். வீட்டிலே பெற்றோர் மூத்தோரைக் குறித்த முறையீடுகள். தேசத்திலே அதிகாரிகளைக் குறித்த குறை கள். இப்படியாக சில தேவ பிள்ளைகளும்கூட தங்களுக்கு மேலாக இரு க்கும் அதிகாரிகளைப் பற்றி குறைகளை கூறுவதற்கும், அவர்கள் காரியங்களை எப்படி செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்குவதிற்கும் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள். அப்படியா னால், அவர்கள் தங்களை முற்றிலும் தேறின, சம்பூரணமான மனிதர்கள் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, நீங்கள் மற்றவ ர்களிலும் சிறந்தவர்களா? எடுத்துக்காட்டாக, நீங்கள் மற்ற விசுவாசிகளைவிட நீடிய பொறுமையுள்ளவர்கள் என்று நினைக்கின்றீர்களா? உங் களோடு தேவன் அதிகமாக பேசி, உங்களுக்கு அதிக ஞானத்தை கொடு த்திருக்கின்றார் என்று எண்ணுகின்றீர்களா? அப்படியானால், மற்றவர்களுடைய குறைகளை சுட்டிக் காண்பிப்பதை விட்டுவிட்டு நீங்கள் பெற்றுக் கொண்ட தெய்வீக சுபாவங்களை சாதகமற்ற சூழ்நிலைகளிலே காண்பியுங்கள். கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே நாம் குற்றமற்றவர்களாகவும் கபடற்றவர்களாகவும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, பூரணமற்ற இந்த உலகத்திலே எல்லா சூழ்நிலைகளிலும் மனரம்யமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். தேவ சித்தத்தை உங்கள் வாழ்விலே நிறைவேற்றுங்கள். கர்த்தருக்கென்று நல்மனதோடே எல்லாற்றையும் செய்யுங்கள்.

ஜெபம்:

என் தாழ்மையில் என்னை நினைத்த தேவனே, குறைகளை தேடுவதிலும், பேசுவதிலும் நான் என்னுடைய நேரத்தை செலவிடாமல், எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2

Category Tags: