தியானம் (ஆவணி 05, 2023)
எனக்கு தந்த பொறுப்பு
2 பேதுரு 1:10
ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்;
ஒரு ஊரின் ராஜாவானவன், ஊரிலிருந்த அணைக்கட்டொன்றில் சிறிய வெடிப்பொன்று காணப்பட்டதால், அதனால் பெரும் அபாயம் ஏற்படுமுன், அதை சிபார்சு செய்து, வேண்டிய திருத்த வேலைகளை செய்யும்படி தனக்கு நம்பிக்கையான ஒரு ஊழியனை அவ்விடத்திற்கு அனுப்பிவைத்தான். குறிப் பிட்ட ஊழியனானவன், போகி ன்ற வழியிலே, ராஜா வினால் வரிவசூலிப்பதற்காக அனுப்ப ட்டவர்கள் தங்களுக்கு கொடு க்கப்பட்ட வேலையை ஒழுங் காக செய்யாமல், அசத் தியா யிருப்பதைக் கண்டு, மிகவும் கோபமடைந்தான். அவ்விடத் திலே தரித்திருந்து, மற்ற ஊழியர்களை கடிந்து கொண்டு, அவர்க ளோடு வாக்குவாதம் செய்தான். இதனால் குறிப்பிட்ட ஊழிய னடைய மனநிலை மாற்றமடைந்தது. தான் அனுப்பப்பட்ட பிரத்தியே கமான நோக்கத்தை மறந்து போனதால், அணைக்கட்டு வெடித்து, அந்த ஊரிலே பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதைக் கேள்விப்பட்ட ராஜாவா னவன் குறிப்பிட்ட ஊழியனோடு பிரியமாக இருப்பானோ? புpரியமானவ ர்களே உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் குறித்து இன்று சிந்தித்துப் பாருங்கள். கோணலும் மாறுபாடான சந்ததியின் நடுவிலே நாம் வாழ்கின்றோம். தேவ ஜனங்கள் கூடும் இடங்களிலேயும், சத்துருவானவன் களைகளை விதைத்திருப்பதை அறிந்திருக்கின்றோம். சில வேளைகளிலே சபைகளிலும் சக ஊழியர்கள் கடமையை தவறுவ தைக் காண்கின்றோம். ஒருவன் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை மறந்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று மற்றவர்களின் குறை களினாலே தன் மனதை நிறைத்து, தன் மனதை குழப்பிவிட்டால் அவன் நிலை தவறிய மனிதனாக இருப்பான். மற்றவர்களின் அசதியியை கண்டு நீங்களும் அசதியுள்ளவர்களாக மாறிவிடாதபடிக்கு விழிப்புள்ள வர்களாய் இருக்க வேண்டும். ஒருபோதும் எவனானாலும் தன்னைக்கு றித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ள வனாய் எண்ணவேண்டும். எனவே மற்றவர்களிடத்திலே குறைகளை கண்டால், அவர்களுடைய குறைகளினிமித்தம் உங்கள் அழைப்பை மறந்து போய்விடாதிருங்கள். குறைகளை கண்டால் அவர்களுக்காக ஜெபியுங்கள். உங்கள் வாழ்விலே தேவ சித்தத்தை நிறைவேற்றுங்கள்.
ஜெபம்:
என் தேவனாகிய கர்த்தாவே, என் வாழ்வைக் குறித்த உம்மு டைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று நான் பகுத்தறியும்படி பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:3