புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 02, 2023)

தேசங்களின் ஆளுகை

யாத்திராகமம் 2:23

அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.


பண்டைய உலகிலே, எகிப்து ராஜ்யத்தை ஆட்சி செய்த பார்வோன் என்று அழைக்கப்பட்ட ராஜா இந்தப் பூமியிலே வல்லமைமிக்க படை களையுடையவுனும், மனகடினமுள்ள ராஜா என்றும் கருதப்பட்டான். பார்வோன் ராஜா, தேவனுடைய ஜன ங்கள் ஏராளமானவர்களும், பலத்தவ ர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண் டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோத மாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், அவன் அவர்களைக்குறித்து ஒரு உபாயம் பண்ணினான். தேவனுடைய ஜன ங்களை அடிமைகளாக்கி, அவர்கள் மேல் ஆளோட்டிகளை வைத்து, அவர்களை வெகுவாய் ஒடுக்கி, கொடுமையாய் வேலை வாங்கினான். அதுமட்டுமல்லாமல், தேவ ஜனங்களிடத்திலே பிறக்கும் ஆண் குழந் தைகளை கொன்று போடும்படி கட்டளை கொடுத்திருந்தான். இப்படி யாக உபத்திரங்களுக்கு மேல் உபத்திரவங்கள். பூமியிலே பெரிய ராஜ்யம். வல்லமைமிக்க ராஜா. யார் உதவி செய்ய முடியும்? தேவ ஜனங்களோ, தங்கள் அடிமைத்தனத்தின் நிலைமையை உணர்ந்து, தேவனை நோக்கி பார்த்தார்கள். அவரிடத்திலே வேண்டுதல் செய் தார்கள். தேவனாகிய கர்த்தர் பார்வோனின் மனக்கடினத்தையும், கொடு மையான ஆட்சியையும் அறியாதிருந்தாரோ? இல்லை, அவர் யாவ ற்றையும் அறிந்தவர், சர்வ வல்லமையுள்ளவர். அவரே ஆளுகை செய்கின்றார். அவர் தம்முடைய ஜனங்களுக்கு முன்குறித்த இரட் சிப்பை அருளினார். யார் மெய்யான தேவன் என்று மனக்கடினப்பட்ட பார்வோன் உணர்ந்து கொண்டான். நாம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர் ஜீவனுள்ளவர். அவர் இன்றும் என்றென்றும் ஆளுகை செய்கி ன்றார். எனவே, உங்கள் முன்பாக இருக்கும் மலைபோன்ற பிரச்ச னைளை கண்டு மனம் தளர்ந்து போய்விடாமல், தேவனுடைய சமுகத்திலே உங்களை தாழ்த்தி தேசத்திற்காக வேண்டுதல் செய்யுங்கள். கர்த்தர்தாமே, சபைகளை துன்புறுத்திய சவுல் என்று அழைக்கபட்ட புவலை நோக்கி: முள்ளில் உதைப்பது உனக்கு கடினம் என்று அன்று பவுலுக்கு கூறினார். நம்முடைய கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவறாயிருக்கின்றார். கர்த்தர் நம் பக்கத்தில் இருப்பதால், கலங்காதிருங்கள். உங்கள் அழைப்பிலே உறுதியாய் நிலைத்திருங்கள். தேவனை நோக்கி பாருங்கள். அவர் தேசத்திலே இரட்சிப்பை உண்டு பண்ணுவார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உபத்திரவங்கள் நெருக்கங்களை கண்டு சோர்ந்து போய்விடாமல், உம் வார்த்தையில் உறுதியாய் நிலைத்திருந்து, உம்மை நோக்கி பார்க்கும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 2:10-12