புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 01, 2023)

சிதறாத வாழ்வை தேடுங்கள்

மத்தேயு 12:30

ஆண்டவர் இயேசு சொன்னார்:என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.


இரவு ஆகாரம் முடிந்ததும், கணவனானவன், தன் மனைவியை நோக்கி: இன்று சந்தையிலே வாங்கி வந்த வாழைப்பழைத்தை பிள்ளைக்கும் கொடுத்து, நீயும் சாப்பிடு என்று கூறினான். ஆனால், மனைவியானவ ளோ, பிள்ளைகுரியதை கொடுத்துவிட்டு, தன்னுடைய பங்கை, சாப்பிடாமல் வைத்திருந்தாள். கணவனானவன் மனைவியை நோக்கி: ஏன், அதை சாப்பிடாமல் வைத்திருக்கின் றாய் என்று கேட்டார். அதற்கு அவள்: நாளை காலை ஆகாரத்திற்கு பிள்ளைக்கு கொடுக்கலாம் என்று கூறினாள். பாருங்கள், பெற்றோர் தங்கள் பெலதின்படி பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கின்றார்கள். சிலர் நாளைய தேவைக்கும், வேறுசிலர், அடுத்த மாதத்திற்குரிய கணித வகுப்பு கட்டணத்திற்கும், இன்னும் சிலர், அடுத்த ஆண்டி ற்கான கல்லூரி செலவிற்கும் சேர்த்து வைக்கின்றார்கள். அதுமட்டு மல்ல, பல ஆண்டுக ளுக்கு பின்நடக்க இருக்கும் திருமண செலவிற்கும், கண்காணாத அடுத்த சந்ததிக்கு தேவையானவைகளையும் சேர்த்து வைக்கின்றார்கள். நிலையில்லாத இந்த உலகிலே, நிலையற்ற வாழ்க்கை வாழும் மனிதர்கள், இந்த பூமியிவே வாழும் நாட்களிலே தங்கள் பிள்ளைகளுக்கு சிற ப்பானவைகளை கொடுக்க விரும்புகின்றார்கள். உயர்ந்தவன். தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல், பெற்றோர் தங்களு டைய பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்து கரிசனையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். அது பெற்றோருக்குரிய நல்ல சுபாவம். ஆனால் நாளைய நிலையை குறித்து நிச்சயம் யாருக்கு உண்டு? காலங்களை அறிந்தவர்கள் யார்? மனிதனுடைய யோசனைகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அவை யாவும் அழிந்து போய்விடும். எனவே, மிகவும் சிற ப்பானவைகளை தங்கள் பிள்ளைகளுக்கும், தங்களுக்கு பின்வரும் சந்த தியினருக்கும் சேர்த்து வைக்க விரும்புகின்றவர்கள், முதலாவதாக, காலத்தை அறிந்த நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுவினிட த்தில் சேரவேண்டும். பின்பு, தங்கள் பிள்ளைகளையும் அவரோடு சேர்க்க வேண்டும். இந்த பூமியிலே பிள்ளைகளுடைய சமாதானமான வாழ்விற்கும், பரலோகிலே நித்திய ஜீவனை அடைவதற்குமுரிய வழி ஆண்டவராகிய இயேசு ஒருவரே. நிலையான, நிம்மதியான வாழ்க்கை பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பினால், ஆண்டவர் இயேசுவோடு அவர் களை சேர்த்துக் கொள்ளுங்கள். அவரோடு சேர்க்காதவன் சிதறடிக்கி ன்றான்.

ஜெபம்:

அசையாததும் மாசற்றதும் அழியாததுமான வாழ்விற்கு என்னை அழைத்த தேவனே, இந்த மேன்மையை நான் உணர்ந்து ஆண்டவர் இயேசுவோடு சேர்ந்து வாழ என்னை உணர்வுள்ளவனாக்குவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 32:19