தியானம் (ஆடி 31, 2023)
ஆரோக்கியம் தரும் அருமருந்து
ரோமர் 12:14
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.
ஒரு மனிதனானவனுடைய காலில் வளர்ந்து வரும் ஒரு கட்டியினால், மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். நோவை ஆற்றும் படிக்கு வைத்தியரொருவரை காணும்படியாக சென்றான். மிகவும் வேதனை யோடு இருந்த அந்த மனிதனாவனை கண்ட வைத்தியர்: உடனடியாக சத்திர சிகிச்யை செய்து, அந்தக் கட்டியை அகற்ற வேண்டும் என்றார். அதற்கு அவன் வைத்தியரை நோக்கி: ஐயா, சிகிச்சை ஒருபக்கம் இருக்க ட்டும். வலி மிகவும் அதிகமாயிருக் கின்றது. வலியை குறைப்பதற்கு ஏதவாது செய்யுங்கள் என்றான். அதற்கு வைத்தியரானவர்: உன்னு டைய வலியை தற்காலிகமாக குறை ப்பதற்கு மாத்திரைகள் உண்டு. ஆனால் அதிகாலேயே நீ வாழ முடி யாது. அவை உன் நோவை கொஞ்சம் தணித்து, உன் சரீரத்திலே வேற பக்கவிளைவுகளை உண்டு பண்ணும். சிகிச்சை செய்தால், உனக்கு ஏற்பட்டிருக்கும் வலி சில நாட்களுக்குள் முற்றாக இல்லாமல் போய்வி டும், நீ ஆரோக்கியமாக உயிர் வாழ்விற்கு அது இன்றியமையாதது என்றார். ஆனால், அவனோ, வலியை குறை க்கும் மாத்திரையில் கொஞ்சக் காலம் இருந்துவிட்டால் நல்லது என்ற சிந்தையுடைய வனா கவே இருந்தான். ஆம், பிரியமானவர்களே, இன்று பல விசுவாசி களுடைய வாழ்க்கையிலே மனப்புண்கள் ஆற்றப்படாமல் இருக்கின்றது. காரணம் என்ன? அவர்கள் அந்த புண்கள் ஆற்றப்படக்கூடாது என்று வாழ்கின்றார்களா? இல்லை. அவை ஆற்றப்படும்படி விரும்புகின் றார்கள். ஆனால், அவை ஆற்றபடுவதற்கு வேண்டிய காயம் கட்டு தலை அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்ள அவர்க ளுக்கு விருப்ப மில்லை. கடலிலே செல்லும் கப்பலிலே அலைகள் மோதுவது போல, நம்முடைய விசுவாசக் கப்பலிலும், தென்றல் மாத்தி ரமல்ல, புயல்க hற்றுக்களும் மோதுகின்ற நாட்கள் உண்டு. நன்மைக்கு தீமை செய்யும் மனிதர்களை வாழ்விலே சந்திக்கின்றோம். சில வேளை களிலே அப்படிப்பட்டவர்கள் சக விசுவாசிகளாகவும் இருக்கலாம். நம்பிக்கைத் துரோகங்களினால், மனவேதனைகள் உண்டாகிவிடுகி ன்றது. அதிலி ருந்து குணப்படும்படி, அருமருந்தாக இருக்கும் தேவ ஆலோசனை களுக்கு நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். மாட்டோம் என்று விட்டுவிடுவோமானால், ஆரோக்கியமான சுக வாழ்வை நாம் தள்ளிப் போடுகின்றவர்களாக காணப்படுவோம்.
ஜெபம்:
ஆறாத காயங்களை ஆற்ற வல்ல தேவனே, மனப்புண்களை ஆற்றும் அருமருந்தாகிய உம் வார்த்தையை நான் உட்கொள்கின்றவனாக வாழும்படி என்னை நீர் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 1:16-17