புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 29, 2023)

உன்னதமானவரின் பிள்ளைகள்

லூக்கா 6:35

உன்னதமானவருக்கு நீங் கள் பிள்ளைகளாயிருப் பீர்கள்இ அவர் நன்றியறி யாதவர்களுக்கும் துரோ கிகளுக்கும் நன்மை செய் கிறாரே


தாங்க முடியாத மனவேதனை. சொல்ல முடியாத மனச்சோர்வு. நான் ஓடின ஓட்டம் என்ன. மற்றவர்களின் நன்மைக்காக பட்ட பிரயாசங்கள் எத்தனை எத்தனையோ. கைமாறு கருதாமல், தற்புகழை நாடாமல், தியாகத்தோடு நற்கிரியைகளை செய்து வந்தேன். ஆனால் நான் செய்த சிறிய குற்றத்திக்காக என்னை எப்படியாக அவமானப்படுத்தினார்கள்? பலர் முன்னிலையிலே என்னை நிந்தித்தார்களே என்று தன் மனதின் ஆழத்தி லிருக்கும் துயரங்களை ஒரு விசுவாசி யானவன் தன் மேயப்பனானவரிடம் கூறினான். அதற்கு அந்த மேய்ப்பரான வர் அவனை நோக்கி: மகனே, நீ பட்ட பிரயாசங்களை ஒரனவிற்கு நானும் அறிந்திருக்கின்றேன். என் வாழ்விலும் கூட நீ உற்சாகத்தோடு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் செய்த நன்மைகளையும் நான் அறிவேன். உன் தியாகமான சேவைகளுக்கு நான் சாட்சியாக இருக்கின்றேன். நன்மை செய்து பாட நுபவிப்பதைக் குறித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் நீ கூறிய ஒரு காரியம் எனக்கு புரியவில்லை. நீ கைமாறு கருதாமல் நன்மை செய்தேன் என்று கூறினாய் அல்லவா? அப்படியானால், உன்னிடத்தில் நன்மைகளை பெற்றவர்கள், உனக்கு நன்மை செய்யவில்லை என்று ஏன் நொந்து கொள்கின்றாய் என்று அந்த விசுவாசியிடம் கேட்டார். அதைக்கேட்ட அந்த விசுவாசியானவனின் முகத்திலே ஒரு மலர்ச்சி ஏற் படுவததை அந்த மேய்ப்பரானவர் கண்டார். ஆம், அந்த விசுவாசியா னவன், தேவனுடைய வார்த்தையை தியானிக்க ஆரம்பித்தான். பிரிய மானவர்களே, நன்மைகள் பல செய்த அந்த விசுவாசியனவன், நன்மைகளை பெற்ற நன்றியற்ற பல மனிதர்களுக்கு சத்துருவானான். 'உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, கைமாறு கருதாமல் நன்மை செய்தால், அந்த கிரியையின்படி வாழுங்கள். அப் பொழுது பரலோகத்தில் உங்கள் கைமாறு அதிகமதிகமாயிருக்கும். நீங்கள் உன்னதமான தேவனுக்கு வார்த்தையினாலும், கிரியைகளினா லும் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள பரலோக பிதாவே, நான் சோர்ந்து போகாமலும், இளைப் படையாமலும், நீர் எனக்கு தந்த திவ்விய சுபாவங்களை ஒரு போதும் விட்டுவிடாமலுமிருக்க எனக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27