தியானம் (ஆடி 28, 2023)
நான் இதை விதைக்கவில்லையே?
கலாத்தியர் 6:7
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
ஒரு வீட்டின் பின்புறத்தில், பக்கத்து வளவிற்குள் இருந்த மாமரமானது பூத்து, காய்த்து, கனிந்திருந்தது. கனிந்த பழங்கள் சில தன்னுடைய வளவிற்குள்ளும் விழுந்திருப்பதை வீட்டின் சொந்தக்காரன் கண்டான். ஆனால், அதை பறவைகள் சாப்பிட்டிடும் என்று பராமுகமாக விட்டுவி ட்டான். சில மாதங்களுக்கு பின், தன்னுடைய வளவிற்குள் சிறிய மாங் கன்றுகள் முளைத்திருப்பதை கண் டான். மாங்கன்றுகள் முளைக்கட்டும், வேறுயாருக்கும் அதை கொடுக்கலாம் என்று தன் உள்ளத்திலே சொல்லிக் கொண்டான். இப்படியோக அவன் பல அலுவல்களில் ஈடுபட்டிருந்ததால், அதை கவனியாதிருந்த போது, அந்த மாங் கன்றுகளில் ஒன்று வளர்ந்து பெரிய மரமாயிற்று. பூத்து, காய்த்து, கனி கொடுத்தது. அந்தக் கனியை அவன் சுவைத்த போது, மிகவும் புளிப்புள்ளதாகவும், புசிப்பதற்கு ஆகா ததுமாக இருக்கக் கண்டான். இது எப்படி ஆயிற்று என்று ஆச்சரி யப்பட்டான். பக்கத்து வீட்டில் இருந்து தன்னுடைய வீட்டிற்குள் விழு ந்த சில விதைகளை பாராமுகமாக விட்டதாலேயே, அப்படியாயிற்று என்று உணர்ந்து கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, இவ் வித மாகவே, சில மனிதர்களின் வாழ்க்கையில் வளர்ந்து பெருகி இரு க்கும் கசப்பானது, மற்றய மனிதர்களின் வாழ்க்கையிலே உண் டாகிவி டுகின்றது. அந்த மனிதர்கள், ஒருவேளை சக வேலையாட் களாகவோ, நண்பர்களாவோ, உறவினர்களாவோ, குடும்பத்தாராகவோ அல்லது சக விசுவாசிகளாகவோ இருக்கலாம். அவர்கள் தங்கள் வாழ்வில் உண்டா யிருக்கும் கசப்பைக் குறித்து உணர்வற்றவர்களாகவே வாழ்கின்றார்கள். இது அவர்களுடைய உணர்வற்ற வாழ்க்கை. அந்தக் கசப்பை அறிந்தோ அறியாமலோ, எப்படியாவது மற்றவர்களுடைய இருதயங்க ளிலே அவர்கள் விதைத்;து விடுகின்றார்கள். எக்காரணம் கொண்டு, நாம் அவற்றை நம்முடைய இருதயமாகிய நல்ல நிலத்திலே விழுந்து முளைப்பதற்கு இடங் கொடுக்கக்கூடாது. கசப்பையும் பிரிவினையையும் உண்டாக்கும் வார்த்தைகளை பேசும் மனிதர்களை குறித்து எச்சரிக் கையாய் இருங்கள். அந்த வீட்டுச் சொந்தக்காரன், தன் வளவிற்குள் விழுந்து மாங்கனிகளை பாராமுகமாகவிட்டுவிட்டதுபோல நீங்கள் விட்டு விடாதபடிக்கு எப்போதும் விழிப்புள்ளவர்களாக இரு ங்கள். கசப்பான விதைகள் பிரிவினையாகிய பெருவிருட்சமாக வள ரும். முடிவிலே அது நம்மை தேவனோடுள்ள உறவிலிருந்து பிரித்துப் போடும்.
ஜெபம்:
புதிய வாழ்வைத் தந்த தேவனே, நான் என் உள்ளத்தில் கசப்பான விதைகள் விழுந்து வளர்வதற்கு இடங் கொடுக்காமல், எச்சரிக்கையான வாழ்க்கை வாழ்வதற்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 கொரி 15:33