புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 25, 2023)

நாம் பெற்றிருக்கும் பாக்கியம்

2 கொரிந்தியர் 4:7

இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.


ஒரு பெரிய மாளிகையிலே வாழ்ந்து வந்த ஐசுவரியவான்னுடைய, படுக்கை அறையானது மிகவும் சிறப்பாக அலங்கரிப்கப்பட்டு, படுக்கை அறை க்கேயுரிய அழகானதும், மங்கலானதுமான மின்குமிழ்கள் பொருத்தப்பட் டிருந்தது. விலையுயர்ந்த மரத்தினாலே செய்யப்பட்ட கட்டில், அதன்மேல் உடல் ஆரோக்கியத்திற்கென பிரத்தியேகமாக செய்யப்பட்ட மெத்தையானது போடப்பட்டிருந்து. அவன் படுக்கைக்குச் செல்லும் போது அவன் நித்திரைக்கு செல்வதற்காகவே அணிவதற்கென விசேஷpத்த படுக்கை உடைகள் இருந்தது. இப்படி யாக அவன் நித்திரை செய்வதற்கென பல ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவனுக்கோ நிம்மதியான நித்திரை வருவதி ல்லை. அதனால் அவன் மனதிலே அவனுக்கு நிம்மதியில்லை. தெருவின் அப்புறமாக, தேவனுக்கு பயந்து வாழும் குடியானவனொருவன் ஒரு ஓலைக் குடிசையிலே வாழ்ந்து வந்தான். அவன் தன் பிழைப்புக் காக அந்த ஐசுவரி யவானின் வீட்டிலே நாளாந்த கூலிவேலை செய்து வந்தான். மாலையிலே தன் வேலையை முடித்ததும், அவன் குளித்த ஆகா ரம் உண்ட பின்னர், தன் பாயை விரித்து, அதிலே நிம்மதியாக படுத்து உறங்கி வந்தான். அவனிடத்திலே செல்வச் செழிப்பு ஏதும் இல்லை ஆனாலும் அவன் மனதிலே நிம்மதியிருந்தது. எனினும் அந்த குடியானவன், ஐசுவரியவானின் வாழ்க்கையைப் பார்த்து, தன் நிலைமையை குறித்து ஏங்கின நாட்கள் உண்டு. அந்த ஐசுவரியவானவன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஊக்கமாக கல்வி கற்று, கடுமையாக உழைத்து வந்தான். இந்த உலகத்தின் செல்வத்தையும், செழிப்பையும் பெற்றுக் கொண்டான். ஆனால் அவன் தான் அடைய வேண் டும் என்ற நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக் கொள்ள முடியவில்லை. எளிமையான குடியானவன், தன்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத நிம்மதியான வாழ்க்கையை உணரால், சீரும் சிறப்புடன் காட்சிய ளிக்கும் வெளிப்பூச்சான குறிப்பிட்ட ஐசுவரியவானின் வாழ்க்கையை இச்சித்தான். பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு வழியாக நாம் பெற்றிருக்கும் அருமையான வாழ்க்கையைக் குறித்து உணர்வுள்ளவர் களாக இருக்க வேண்டும். ஒருவேளை இந்த உலகத்தின் பொக்கிஷம் நம்மிடத்தில் இல்லாதிருக்கலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் முகத் திலுள்ள தேவனுடைய மகிமையின் அறிவாகிய ஒளியைத் நாம் இந்த மட் பாண்டங்களிலே பெற்றிருக்கின்றோம். அதை நாம் எல்லாக் காவ லோடும் காத்துக் கொள்ளக்கடவோம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இந்த உலகிலே என் பொருளாதர நிலைமை எப்படியாக இருந்தாலும், நான் உம்மிடமிருந்து பெற்றிருக்கும் பொக்கிஷத்தை காத்துக் கொள்ளும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 127:3