புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 23, 2023)

சுபாவங்களை ஆராய்தறியுங்கள்

யாக்கோபு 4:10

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.


குறிப்பிட்ட சபையைச் சேர்ந்த வாலிபர்கள், சபையோருக்கு விழிப்புணர்வை உண்டுபண்ணும்படிக்கு ஒரு நாடகத்தை நடித்து காண்பித் தார்கள். அதன்படிக்கு, தன்னை நீதிமான் என்று கூறிக் கொள்ளும் மனிதனானவன், தன்னுடைய பக்தியுள்ள வாழ்க்கையை குறித்து கூறும் போது: 'என்னிடம்; குடிவெறி, புகைத்தல் போன்ற தவறான பழக்கங் களில்லை. நெறிகெட்ட திரைப்படங்களையோ, இன்ரநெற் ஊடகங்கள் வழியாக வரும் தகுதியற்ற காட்சிகளையோ பார்ப்பதில்லை. எவரோடும் சண்டைக்கோ, வாக்குவாதங்களுக்கோ போனதில்லை. என்னிடம் எரிச்சல் இல்iலை. பொறாமை இல்லை. அநியாயம் செய் வதில்லை. உபவாசிக்கின்றேன், ஜெபிக்கின்றேன், தான தர்மங்களை செய்து வருகின்றேன்' என்று தன்னுடைய வாழ்க்கையின் சாதனை களை பட்டியல் படுத்திக் கொண்டிருக்கும் போது, சாத்த னானவன் அவனுடைய வீட்டிற்கு வந்தான். அதைக் கண்ட அந்த மனித னானவன் சாத்தானாவனை நோக்கி: உனக்கிங்கே என்ன வேலை? உன்னுடையதொன்றும் என்னிடம் இல்லை என்று சாத்தானை விரட்டிவிடப் பார் த்தான். அதற்கு சாத்தானவன் அவனை நோக்கி: உன்னிடம் பல குறை கள் இல்லை. ஆனால் என்னுடைய பிரதானமான சுபாவம் உன்னிடம் இருக்கின்றதே, நான் இங்கு வருவதற்கு அது எனக்கு போதும் என்றான். அதற்கு அந்த மனிதனானவன் கோபத்துடன்: எனக்கும் உனக்கும் கணக்குவழக்கு ஏதும் இல்லை. அப்படி உன்னுடைய சுபாவம் ஒன்றும் எனக்குள் இல்லை என்று கூறினான். அதற்கு சாத்தானானவன்: உன்னி டத்தில் பெருமை இருக்கின்றே. அது என்னுடையது என்றான். இப்படியாக ஒரு சுவாரசியம் நிறைந்த, கருத்துள்ள நாடகத்தை நடித்துக் காண்பித்தார்கள். பிரியமானவர்களே, தேவன் பெருமையுள்ளவர்களு க்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக் கிறார். சில வேளையிலே, சில தேவ பிள்ளைகள் கூட தங்களை அறி யாமல், தங்கள் கிரியைகளினாலே தங்களை நீதிமான்களாக காண்பிக்க முற்படுகின்றார்கள். இத்தகைய மேன்மைபாரட்டுதலினால், பெரு மையை தங்கள் உள்ளத்திலே வளர்த்துக் கொள்கின்றார்கள். நாம் நம்முடைய நற்கிரியைகளைக் குறித்து மேன்மைபாராட்டாதபடிக்கு, தம்முடைய திருச்சித்த்ததின்படி நம்மில் விருப்பத்தையும் செய்கையை யும் நம்மில் உண்டுபண்ணுகின்ற தேவனாகிய கர்த்தரின் முன்னி லையில் நம்மை தாழ்த்துவோமாக.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்முடைய திருக்கரத்தின் கருவி என்பதை உணர்ந்து, உம்முடைய சமுகத்தில் எப்போதும் தாழ்மையுள்ளவனாக இருக்க நீர் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 18:9-14