தியானம் (ஆடி 22, 2023)
உங்கள் வாழ்வின் மேன்மை என்ன?
மத்தேயு 3:8
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்
ஒரு கிடாய் ஆடானது அங்குமிங்குமாக கட்டுமீறி ஓடித்திரிந்ததால், சேற் றும் சதுப்பு நிலமுமான ஒரு இடத்திலே அகப்பட்டுவிட்டது. அந்த ஆடா னது, சேற்றிலே கொஞ்சம் கொஞ்சமான புதைந்து கொண்டு இருந்தது. அந்த இடத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வழியேதும் இல்லை என்று உணராமல், நான் ஒரு கிடாய் ஆடு என்று பெருமையோடு நின்ற காட்சி யானது, பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அது புதைந்து கொண்டு போகும் போது, என்னு டைய கொம்பைப் பார், சேற்றுக்கு மேலாக உறுதியாக என் தலையில் இருக்கின்றது என்று பெருமை பாராட்டியதாம். பிரியமானவர்களே, இன் றும் பல மனிதர்கள் அந்த கிடாய் ஆட்டைப் போலவே, மனிதகுலமா னது பாவ சேற்றிலிருக்கின்றது என்றும், அந்த அழிவிலிருந்து விடுதலை யடைய வேண்டும் என்பதை சற்றேனும் உணரால், தங்கள் குடும்ப பின் னணியையும், வம்சவரலாறுகளையும், தங்கள் மத நம்பிக்கைகளையும் குறித்து மேன்மை பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சில வேளைக ளிலே, சில தேவ பிள்ளைகளும், ஒவ்வொருவரும் தனிப்பட ஆண்ட வர் இயேசுவினால் உண்டான இரட்சிப்பை பெற்றுக் கொள்ள வேண் டும் என்பதை மறந்து, தாங்கள் பரம்பரை பரம்பரையாகவே சிறப்பு குடிமக்கள் என்றும், மற்றவர்களைப் போல பாவிகள் அல்ல என்றும் தம்மைக் குறித்து பெருமைபாராட்டிக் கொள்கின்றார்கள். ஆண்டவரா கிய இயேசு இந்த உலகிலே இருந்த நாட்களிலும், பரிசேயர், சதுசேயர், வேத வல்லுஞர்கள், ஆசாரியர்கள் பலர், இவ்வண்ணமாகவே தங்கள் பின்னணியைக் குறித்து மேன்மைபாரட்டி வந்தார்கள். தேவ மனுஷனாகிய யோவான்ஸ்நானன் அவர்களை நோக்கி: 'ஆபிரகாம் எங்களுக் குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதி ருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்' என்று உங்களுக்குச் சொல் லுகிறேன் என்றார். ஆனால், ஊரிலுள்ள பாமர ஜனங்களில் பலர், தங்கள் அவல நிலைமையை உணர்ந்தவர்களாக, பாவ சேற்றிலிருந்து விடுதலையை பெற்றுக் கொள்ளும்படி ஆண்டவர் இயேசுவை தேடிச் சென்றார்கள். தங்களை தாழ்த்தி மனந்திரும்புதலுக்கேற்ற கனியை கொடுத்தார்கள். இரட்சிப்பை பெற்றுக் கொண்டார்கள். எனவே, நம்மிடமிருக்கும் எந்த காரியத்தைக் குறித்தும் நாம் மேன்மைபாராட்டிக் கொள்ளாமல், கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி, அவர் தரும் மீட்பை பெற்று, நித்திய ஜீவனை பெறும்படி முன்னேறிச் செல்வோமாக.
ஜெபம்:
என் நிலையை நன்றாக அறிந்த தேவனே, இந்தப் பூமியிலே நான் எதைக் குறித்தும் மேன்மைபாராட்டாதபடிக்கு, என் நிலைமையை உணர்ந்து உம்மை கிட்டிச் சேர உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 3:23-24