தியானம் (ஆடி 21, 2023)
பிரியமுள்ள ஆராதனை
வெளிப்படுத்தல் 3:8
உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியி னாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்,
எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒரு மனிதனானவனின் பிள்ளைகள், வயது சென்ற தங்கள் தந்தையாரை மிகவும் அன்பு செய்தார்கள். அவர்களுக்கு படித்து பட்டம் பெறுவதற்கு எந்த வசதிகளும், வளங்கள் ஏதும் இருந்ததில்லை. ஆனால், அவர்களுடைய தந்தையார் அவர்களை, சின்ன வயதிலிருந்தே தேவனுடைய வழியிலே நடத்தி வந்தார். தேவபயம் என்றால் என்ன? எப்படி மெய்ஞானத்தை பெற்றுக்கொள்வது என்பதைக் குறித்து அவர்களு க்கு நன்றாக போதித்து, வழிகாட்டி வந்தார். அவர்களுக்கு பெரிதான வருமானம் இல்லாதிருந்தும், தாங் கள் கஷ;டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் வருவாயில், ஒருபகு தியை தங்கள் தந்தையாரின் விசேஷித்த பிறந்த தினத்திற்காக சேர்த்து வந் தார்கள். குடும்பத்தினராக சேர் ந்து ஒரு சிறிய விருந்தை செய்து தங் கள் தந்தையாரை மகிழ்விப்பதற்காக, பல தியாகங்களை செய்ய வேண்டியாதாயிருந்தது. பெரிதான விருந்துசாலையோ, இடாம்பீகர மான கொண்டாட்டங்களோ, பெரிதான பரிசுப் பொருட்களோ இல்லை. ஆனால், பிள்ளைகளின் உண்மை யான அன்பைக் குறித்து தந்தையார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆம் பிரியமானவர்களே, நம்முடைய பரம பிதாவும், பெரும் பெரும் காரியங்களை நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. பூமியும் அதின் நிறைவும், அதன் குடிகளும் கர்த்தருடையது. அவர் தாமே பெரியவராக இருந்தும், நம்முடைய இருதயத்தை நோக்கிப் பார்க்கின்றார். உண்மையுள்ள இருயதத்திலிருந்து வரும் துதி ஆராதனை யில் அவர் பிரியப்படுகின்றார். மற்றவர்கள் பெரிய காரியங்களை செய் கின்றார்கள் எனவே நானும் அப்படி செய்ய வேண்டும் என்று பெரும் காரியங்களை செய்வதைக் குறித்து மனதில் அலட்டிக் கொள்ளாமல், தேவன் தந்த பெலத்தின்படி, செய்கின்ற காரியத்திலே உண்மையுள்ள வர்களாக இருங்கள். நீங்கள் ஆராதிக்கக் கூடும் ஸ்தலம் சிறிய குடிசையாக இருந்தாலும், அதைக் குறித்து கவலையடையாமல், தேவபயத்தோடு வாழுங்கள். தேவன் முன்னிலையில் ஆவியோடும் உண்மை யோடும் அவரைத் தொழுது கொள்ளுங்கள். மனிதர்களுக்கு பிரியமான ஆராதனையை செய்யாமல், தேவனுக்கு பிரியமான ஆராதனை செய் யுங்கள்.
ஜெபம்:
சுகம் தரும் தேவனே, ஆண்டுகள் கடந்து சென்றாலும் நான் உம் மேல் கொண்டுள்ள விசுவாசத்திலே தளர்ந்து போய்விடாதபடிக்கு என் குறைவுகளிலே நீரே நிறைவாக இருந்து என்னை வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 29:2