தியானம் (ஆடி 20, 2023)
புத்தியுள்ள ஆராதனை
ரோமர் 12:1
நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று
தகப்பனானவருடைய அறுபதாவது பிறந்தநாள் விழாவை, பிள்ளைகள் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். உற்றார், உறவினரை வரவழை த்து, மேளதாளங்களுடன், தகப்பனானவரை மாலைகள் போட்டு வரவே ற்றார்கள். பலர் முன்னிலையிலே சிறப்புரைகளை ஆற்றினார்கள். பல வெகுமதிகளை கொடுத்தார்கள். விரு ந்தாளிகளுக்கு சிறப்பு விருந்தை ஆய த்தப்;படுத்தி, பாடல்கள் நடனங்க ளோடு இரவை களித்தார்கள். ஆனால், தகப்பனானவருடைய மனதிலே தன் னுடைய பிள்ளைகளின் வாழ்க்கை முறையைக் குறித்து சற்றேனும் திரு ப்தியில்லை. பிள்ளைகள் கல்வி கற்று, நல்ல உத்தியோகங்களை செய்து, வீடுவாசல்களோடு வாழ்ந்த போதும், அவர்கள் பெற்றோரின் ஆலோச னைகளை தள்ளிவிட்டு, தங்கள் கண்போன வழியிலே நடந்து வந்தார் கள். இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை ஊருக்கு உலகுக்கும் வெளிக்காட்டும் வெளிவேஷம் என்று தகப்பனானவர் அறிந்திருந்தார். ஆனால், பிள்ளைகளுடைய மனதிலே யோ, தாங்கள் ஏற்படுத்திய பெரிதான விழாவைக் குறித்து பெருமிதம் அடைந்தா ர்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, இன்றைய உல கிலே, தங்கள் தங்கள் விருப்பம்போல், பல விதமாக துதி ஆராதனை களை தேவாதி தேவனுக்கு செலுத்து வருகின்றார்கள். நேர்த்தியான இசைக் கருவிகளை இசைத்து, அழகான மேடைகளிலே, அநேக காரி யங்களை நடப்பிக்கின்றார்கள். எவரையும் நியாயந்தீர்ப்பது நம்முடைய வேலையல்ல ஆனால் நாம் ஒவ்வொருவரும் செய்யும் ஆராதனைக ளிலே யார் திருப்தியடைகின் றார்கள் என்பதைக் குறித்து நாம் எண் ணமுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையின் வழியிலே வாழ்க்கையை வாழாமல், நாம் ஏறெடுக்கும் எந்த துதிப் பலிகளிலும் தேவனுக்கு சுகந்த வாசனையாக இருக்குமோ? தேவன் தாமே, என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் அறிநதிருக்கி ன்றார். என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிக்கின்றார். நான் நட ந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கின்றீர்; என் வழி களெல்லாம் அவருக்கு தெரியும். எனவே, நமக்கு ஏற்புடைய துதி யையல்ல, மனுஷக்கு பிரியமான ஆராதனைகளை அல்ல, புதிய வர் களை கவரும் பாடல்களையல்ல, தேவனுக்கு பிரியமானதும், அவரு க்கு ஏற்புடையதுமான துதி ஆராதனையை அவருக்கு செலுத்துவோமாக.
ஜெபம்:
என் தேவனாகிய கர்த்தாவே, உமக்கு அருவருப்பான ஆராத னையை நான் செய்யாமல், உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, உம க்கு பிரியமான வாழ்க்கை வாழும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதய த்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 139:24