புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 19, 2023)

விழிப்புடன் தரித்திருங்கள்

யோவான் 16:13

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்


தீர்க்கதரிசியாகிய மோசேயானவன் மரித்துப்போன பின்பு, யோசுவா தேவ ஜனங்களை வழிநடத்தி, யுத்தங்களிலே வெற்றிபெற்று வந்தான். எரிகேர் ஆயிஎன்னும் பட்டணங்களை யோசுவா மேற்கொண்டதை கேள் விப்பட்ட எதிரிகளாகிய கிபியோனின்; குடிகள் ஒரு தந்திரமான யோச னைபண்ணினார்கள். அவர்கள் கானான் தேசத்திலே குடியிருந்தும், தங் களை தூரதேசத்தில் இருந்து வரும் ஸ்தானாபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப்பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள் மேல் வைத்து, பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது. அவர்கள் யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய செயல்களை கீர்த்தியையும், அவருடைய செயல்களையும் கேள்விப்பட்டு, அடிமைகளாக உம்மிடத்தில் வந்தோம் எனவே எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக்கேளாமல் அவர்க ளுடைய வார்த்தைகளை கேட்டு, அவர்களோடு சமாதானத்தின் உடன்ப டிக்கையை பண்ணினார்கள். அவர் களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள். ஆனால், கர்த்தரை கேளாமல், கர்த்தர்பேரில் ஆணையிட்டுக் கொடுத்ததால், எதிரி களை அவர்கள் பாதுகாக்க வேண்டியதாயிற்று. பிரியமானவர்களே, நம்முடைய வாழ்விலும் நம்மை நோக்கி வரும் சூழ்நிலைகளை மாம்ச கண்களால் பார்த்து, தீர்மானங்களை எடுக்காமல், கர்த்தருடைய வார் த்தையின் வெளிச்சத்திலே நாம் அவைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். முன்பு பல போராட்டங்களை வென்றேன் என்பது போதாது. இந்தப் போராட்டத்தையும் மேற்கொள்ளுதவற்கு நமக்கு தேவனுடை துணை இன்றியமையாதது. நம்மை சகல சத்தியத்திலும் வழிநத்திச் செல்லும்படி துணையாளராகிய சத்திய ஆவியானவர் நம்மோடு இருக்கின்றார். எனவே, அவருடைய வழிநட த்துதலுக்கு இடங்கொடுப்போமாக.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, என்னுடைய எண்ணத்தின்படி நான் எதையும் செய்யாதபடிக்கு, உமக்கு பிரியமானதை செய்து, உம்முடைய சித்தத்திற்கு இடங்கொடுக்கும் உணர்வுள்ள இருதயத்தை தந்து நடததிச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோசுவா 9:1-19