புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 18, 2023)

இலக்கை அடையும் வரைக்கும்...

பிலிப்பியர் 3:12

நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறின வனானேன் என்று எண்ணாமல்,


ஒரு ஊரிலே வாழ்ந்த வைத்தியரானவர், அநேக வருடங்களாக அந்த ஊரிலே பணி புரிந்து வந்தார். அவர் மிகவும் அனுபவமிக்க வைத்தி யராக இருந்தபோதும், தன்னிடம் வரும் நோயாளிகளை அநேக வருட ங்கள் அறிந்திருந்தபோது, ஒவ்வொரு முறை அவர்கள் வைத்தியரை சந்திக்க செல்லும்போது, அவர் தவறால் அடிப்படை பரிசோதனைகளை செய்வது வழக்கமாக இருந்தது. நான் வைத்திய துறையிலே பாண் டித்தியம் பெற்றவன். இத்தனை தக மைகள் எனக்கு உண்டு. அநேகமா யிரம் நோயாளிகளை நான்; சந்தித் திரு க்கின்றேன். எனவே எனக்கு எல்லாம் தெரியும் என்று அடிப்படையான காரி யங்களை பாராமுகமாக விட்டுவிடுவ தில்லை. அதுபோலவே நித்திய ஜீவனை நோக்கி சென்று கொண் டிருக்கும் நாம், இந்த பூவுல வாழ்க்கையிலே எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், தகமைகள் அநேகம் இருந்தாலும், அனுபமிக்கவர்களாக இருந்தாலும், இந்த உலகிலே நாம் வாழும்வரை அடிப்படையான காரி யங்களை விட்டுவிட முடியாது. நம்மை நோக்கி ஒரு போராட்டம் வரும் போது, இப்படியாக எத்தனை போராட்டங்களை சந்தித்திருக்கின்றேன். இதை நான் இலகுவாக மேற்கொள்வேன் என்று தேவனுடைய வழி நடத்துதலை பெற்றுக்கொள்வதை விட்டுவிட கூடாது. மோசே என்னும் தீர்க்கதரிசியானவன் கர்த்தருடைய வீட்டில் எங்கும் அவன் உண்மையு ள்ளவனாக இருந்தான். கர்த்தர் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுனார். அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; என்று கர்த்தர் அவன் சார்பில் சாட்சி பகிர்ந்தார் (எண் 12:8). அவன் 40 வருட ங்கள் தன் ஜனங்களை நடத்திச் சென்ற போதும், ஒவ்வொரு சந்தர்ப்ப த்திலும் கர்த்தருடைய வழிநடத்துதலை அவன் நாடி நின்றேன். நாம் எதிர் நோக் கும் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் தேவனுடைய வார்த்தையின் வெளி ச்சத்தில் சோதித்துப்பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ள வேண்டும். நான் அடைந்தாயிற்று அல்லது முற்றலும் தேறினவனானேன் என்று கூறி அனுதின வேத தியானத்தை விட்டுவிட முடியாது. ஊக்கமாக ஜெபிப்பதையும், சபைகூடிவருதலைவிட்டுவிடமுடியாது. கிறிஸ்துவிலே நிலைத்திருந்து வாழ்ந்து வந்த நாம், இனி நம் பெலத்தினால் எல்லா வற்றையும் செய்வோம் என்று எண்ணம் கொள்ளக்கூடாது. எனவே வேதவாக்கியங்களை அற்பமாக எண்ணாமல், இந்த பூமியிலே வாழும் வரை அவைகளின் வெளிச்சத்திலே வாழ பழகிக்கொள்வோமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, எல்லாம் அறிந்தவன், என்ற மனநிலையை அடையாதபடிக்கு, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் எப்போதும் வாழ உணர்வுள்ள இருயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 43:11-19

Category Tags: